எதிர்கட்சித் தலைவர் ரணில் இந்தியாவிற்கு திடீர் விஜயம்
எதிர்கட்சித் தலைவர் இன்று சனிக்கிழமை காலை இந்தியா சென்றதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் இன்று மாலை அல்லது நாளை நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் சிங்கள முஸ்லிம் மக்கள் இடையே வன்முறைகள் வெடித்துள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/74125.html
மகிந்தவைச் சந்திக்க ஹெலியில் செல்லும் அள்ளக்கை முஸ்லிம் அமைச்சர்கள்
இன்று அதிகாலை பாணந்துறை நோலிமிட் தீக்கிரையாக்கப்பட்டத்தை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம், உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதன்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கோள்ளப்படும் தாக்குதல்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார். இதன்போது ஜனாதிபதி நீங்கள்தான் இதுபோன்ற நடவடிக்கைகளை வெளிநாடுகளுக்கு கூறிவருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், நீங்கள் இதற்கு சரியான ஒரு நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே எங்களுக்கு வெளிநாடுகளில் முறையிடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவங்கள் தொடர்பில் உங்களுடன் உடனடியாக எமது முஸ்லிம் அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும் என தெரவித்தபோது, தான் பதுளையில் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நீங்கள் எங்கிருந்தாலும் நாம் அங்கு வந்து உங்களை சிந்திப்போம் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தபோது, அப்படி என்றால் நான் உங்களுக்கு ஹெலி ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறேன், முஸ்லிம் அமைச்சர்களை அழைத்துக்கொண்டு வாருங்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் ஹக்கீம் பதுளை பயணிக்கும் விடயம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் ஹக்கீம் பதுளை பயணிக்கும் விடயம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரியவருகிறது.
http://www.jvpnews.com/srilanka/74128.html
Geen opmerkingen:
Een reactie posten