தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

யாழில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகில் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!



இலங்கையில் வாழும் அஹமதியா முஸ்லிம்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானம்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 09:30.31 AM GMT ]
அஹமதியா முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ள இவர்கள், இலங்கையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூடிய அவதானத்தை செலுத்தியுள்ளனர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டே இவர்கள், இலங்கை வந்துள்ளதுடன் அவர்கள் நாட்டில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஹமதியா முஸ்லிம் ஜமாத், முஸ்லிம் சமயத்தில் ஒரு பிரிவினர். இவர்கள் உலகில் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அஹமதியா முஸ்லிம் ஜமாத் பிரிவினரை ஏனைய முஸ்லிம் மத பிரிவினர் முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagtz.html

நுவரெலியா மாவட்டத்தில் வழமை நிலைக்கு திரும்பும் சுகாதார வைத்திய நிலையங்கள்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 09:47.44 AM GMT ]
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 13 சுகாதார வைத்திய காரியாலயங்களில், கொட்டகலை காரியாலயம் தவிர்ந்த ஏனைய அனைத்தும் திங்கட்கிழமை முதல் இயங்கும் என இலங்கை மருத்துவர் அதிகாரிகள் சங்கம்
தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை 18 ஆம் திகதியிலிருந்து தொழிற்சங்கத்தின்  முடிவுகளுக்கேற்ப சுகாதார வைத்திய அதிகாரிகள் பணி பகிஷ்கரிப்பு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தருவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நவீன் திசாநாயக்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு உறுதி வழங்கியதையடுத்து, இந்த முடிவிற்கு வந்துள்ளதாக சங்கம் தெரிவித்தது.
இருப்பினும் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயம் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது .
கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்திற்கொண்டு தாம் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொட்டகலை காரியாலயம் திறக்கப்படுவது குறித்து
பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன்படி ஏனைய 13 சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலயங்களைச் சேர்ந்த 20 மருத்துவர்கள் திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்புவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagt0.html
யாழில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகில் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 09:50.59 AM GMT ]
யாழ்.குடாநாட்டில் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் தொழுகை இடங்கள் மீதும் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் குடாநாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் சுற்றாடலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் படையினரின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்றய தினம் இரவு 11.45மணியளவில் யாழ்.சோனக தெரு பகுதியில் அமைந்துள்ள ஹமால் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இராணுவ புலனாய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றய தினம் மாலை தொடக்கம் மானிப்பாய் பள்ளிவாசல், யாழ்.சோனக தெருவில் உள்ள பெரி ய பள்ளிவாசல் ஆகியவற்றின் சுற்றாடலில் பெருமளவு படையினர் மற்றும் விசேட அதிபரப்படையினர் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே,நேற்றய தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றவுடன் அந்தப் பகுதியில் மக்கள் பெருமளவில் கூடியபோதும் தாக்குதல் நடத்தியவர்களை காணமுடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினமும் நாவாந்துறை, மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் பெருமளவில் படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிலைகொண்டுள்ளதுடன், ரோந்து நடவடிக்கைகள் மற்றும் திடீர் வீதிச்சோதனைகளையும் நடத்திவருகின்றனர்.
இதேவேளை நேற்றய தினம் இரவு ஹமல் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் இனவாத நோக்கில் யாழ்.குடாநாட்டிலும் வன்முறைகளை தூண்டும் வகையில் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெரிதுபடுத்தாமல் இருக்கவே தாம் விரும்புவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagt1.html

Geen opmerkingen:

Een reactie posten