தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

வாசுதேவாவிற்கு ஏற்பட்ட சுடலை ஞானம்!

மகிந்தரின் இணையம் பறி போனது

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் பல அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சைபர்தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டது என்பதை, அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றிரவு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் தற்போது அது செயற்படத் தொடங்கியுள்ளதாகவும், திங்கட்கிழமை தொடக்கம்அ பதவேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சைபடிர் தாக்குதல்களின் மூலம், சிறிலங்கா அதிபர், திறைசேரி, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள் முடக்கப்பட்டதாகவும், சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் தற்போது இயங்கி வருவதாக, அதிபரின் ஊடகப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார்.
திறைசேரி இணையத்தளமும் இயங்கத் தொடங்கியுள்ளது.
ஒப்பரேசன் சிறிலங்கா என்ற பெயருடையவர்களே, சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/74186.html

வாசுதேவாவிற்கு ஏற்பட்ட சுடலை ஞானம்

பொதுபல சேனா தனது வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கும் வேளையில் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் அவரை சார்ந்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்.
அளுத்கம சம்பவங்கள் அரசாங்கத்துக்கு அவப்பேற்றை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டவையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வாசுதேவ நாணயக்காரவின் எஜமான்களில் ஒருவரான கோட்டாபய ராஜபக்ச தோற்றுவித்து வளர்த்து விழா நடத்திய அமைப்பு அரசாங்கதின் கட்டளைப்படி நடத்தும் வெறியாட்டத்தை நடத்துவதே அரசாங்கம் என்பதை வாசுதேவ வசதியாக மறந்துவிடுகிறார்
http://www.jvpnews.com/srilanka/74177.html

Geen opmerkingen:

Een reactie posten