தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

வடக்கில் பொலிஸார் இலஞ்சம் பெறுகின்றனர்!

இராணுத்துடன் நெருங்கிய தொடர்புடைய பொதுபல சேனா HHW

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ்விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரும் சம்பந்தப்பட்டிருக்க கூடும்.
இந்த சம்பவம் தொடர்பில் 40க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவற்துறையினர் கூறி வருகிறார்.
ஆனால் வெறும் கைது செய்யும் செயற்பாடுகளை விட்டுவிட்டு, பௌத்த அடிப்படைவாதிகளுக்கும், படைத்தரப்பினருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/74183.html

வடக்கில் பொலிஸார் இலஞ்சம் பெறுகின்றனர்!

கடமையில் ஈடுபட்டிருக்கும் இலங்கைப்பொலிஸார் இரவு வேளையில் இலஞ்சம் வாங்குகின்றனர் என்ற முறைப்பாட்டை வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் காரணமாக பொலிஸாரைச் சீருடையில் பணிக்கு அமர்த்தாமல் சிவில் உடையில் கடமையில் ஈடுபட வைத்திருப்பதாகவும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
குடாநாட்டினில் தொடரும் வாள் வெட்டுக்கள் பற்றி தெரிவிக்கையினில் வாள் வைத்திருப்போரையும், அதனை தயாரிக்கும் கம்மாலை உரிமையாளர்களையும் அவதானித்து வருகிறோம். இது தொடர்பாக பொலிஸார் சில நபர்களைக் கைது செய்துள்ளனர். வாள் தயாரிக்கும் கம்மாலைகளைப் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர்.” – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74180.html

Geen opmerkingen:

Een reactie posten