மாணவி நந்தினி கூறுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்பது கனவு, இதற்கு கடுமையாக உழைத்தேன்.
10ம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்தேன், பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பில் 1170 மதிப்பெண் பெற்றேன். இதையடுத்து மருத்துவ படிப்புக்கான கட்–ஆப் வாங்கி விட்டேன்.
இதனால் எப்படியும் எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவர் விடலாம் என மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆனால் உரிய காலத்தில் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தும் கலந்தாய்வு அழைப்பு கடிதம் வராததால் அதிர்ச்சிக்குள்ளானேன்.
பின்னர் மருத்துவ விதிமுறைகளை தெரிந்து கொண்டு கலந்தாய்வில் பங்கேற்றேன்.
ஆனால் திடீரென இலங்கை அகதி என்பதால் மருத்துவ படிப்புக்கு அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள்.
இதை கேட்டதும் நான் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளாளேன். பின்னர் இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரை சந்திக்க சென்றேன், ஆனால் அவரும் விடுமுறையில் போய்விட்டார்.
ஆனால் நான் ஏற்கனவே மருத்துவ படிப்பு கலந்தாய்விற்கு செல்வது தொடர்பாக ஆணையாளருக்கு மனு கொடுத்துள்ளேன்.
என் ஆசையே மருத்துவ படிப்புதான், அதற்காகத்தான் இத்தனை கஷ்டப்பட்டு படித்தேன். இப்போது திடீரென பொறியியல் படி என்றால் நியாயமா?
1990ம் ஆண்டு எங்கள் குடும்பம் இலங்கையில் உள்ள சொத்து சுகங்களை விட்டுவிட்டு இங்கு அகதிகளாக வந்தோம். என் தாய்–தந்தை கூலி வேலைகளுக்கு சென்று என்னை படிக்க வைத்தனர்.
என் மருத்துவர் கனவை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இப்போது மருத்துவர் கனவு நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன் என்றும் போராடுவதை தவிர வேறு என்ன செய்வது எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.newindianews.com/view.php?22oMM302lOK4e2DmKcb240Mdd304ybc3mDVe42OlJ0226AK3 |
Geen opmerkingen:
Een reactie posten