தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

தொலைபேசி ஒட்டுக்கேட்பு: பகிரங்கமாக மன்னிப்புகேட்டார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் !

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் நியூஸ் ஒப் த வோர்ல்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் பிரதமர் டேவிட் கமரூனின் முன்னாள் ஊடக செய்தித் தொடர்பு இயக்குநருமான எண்டி கூல்சன் குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. எனினும் எண்டி கூல்சனுடன் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நியூஸ் ஒப் த வோர்ல்ட் பத்திரிகையின் தலைமை நிர்வாகியான ரெபேக்கா புரூக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகிய இந்த வழக்கு மீதான விசாரணைகளில் எண்டி கூல்சன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தே வந்திருந்துள்ளார். கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் தொலைபேசி உரையாடல்- நூற்றுக்கணக்கான பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்கள் எவ்வாறு ஒட்டுக்கேட்கபட்டன என்பது நீதிமன்ற விசாரணைகளில் இருந்து வெளிவந்துள்ளது.
இவர்கள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்டதன் காரணமாக எலிசபத் மகாராணியின் பேரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தனித்துவமான செய்திகளையும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நோக்கிலும் தொலைபேசி உரையாடல்களை இவர்கள் ஒட்டுக்கேட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டிருந்த எண்டி கூல்சன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ள லண்டன் நீதிமன்றம் ரெபேக்கா புரூக்ஸை விடுதலை செய்துள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கியதும் 168 வருட சரித்திரத்தைக் கொண்டதுமான நியூஸ் ஒப் த வோர்ல்ட் பத்திரிகை நிறுவனம் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் விவகாரத்தை அடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் மூடப்பட்டது. இதன் விளைவாக சுமார் 200 பேர் தொழிலை இழக்கவும் நேரிட்டது.
இருந்த போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடுகளை செலுத்தத் தயாராக உள்ளதாகவும் பொலிஸாரின் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் நியூஸ் ஒப் த வோர்ல்ட் பத்திரிகை ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/252.html

Geen opmerkingen:

Een reactie posten