காத்தான்குடியில் முஸ்லீம் மக்கள் உரிமைக்காக போராட அமைச்சர் ஹிஸ்புல்லா கொழும்பில் மகிந்தரின் வங்களாவில் படுத்துறங்கும் அவலம் முஸ்லீம்களுக்கு எந்த ஒரு முஸ்லீம் அமைச்சரும் இன்று வரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட வில்லை எல்லோரும் அமைச்சு பதவி பறி போய் விடும் எனும் அச்சத்தில் அடக்கி வாசிக்கிறார்கள் சம்பந்தன் ஐயாவுக்கு உள்ள அக்கரை கூட எம் இன தலைவர்களிடம் இல்லை என கூறிய எ.சீ.எம்.கனிபா எம் தலைவரு இனி வரும் நாட்களில் சம்பந்தன் ஐயா என கூச்சலிட்டார்.
மேலும் காத்தான்குடி ஆர்ப்பாட்டத்தில் நடந்தவை
பொது பால சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரரை கைது செய்யுமாறு வலியுறுத்தி காத்தான்குடியில் இன்று (20) ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற ஜும் ஆத் தொழுகையை யடுத்து பள்ளிவாயல் வீதியில் சில இளைஞர்கள் சுலோகங்களை தாங்கி நின்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாதின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரரை கைது செய், பொது பல சேனாவை தடை செய் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கி நின்றனர்.
இதேநேரம், காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற ஜும் ஆத் தொழுகையின் பின்னர் அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது கொல்லப்பட்டவர்களுக்கான ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டதுடன் பிராத்தனையும் நடைபெற்றது.

http://www.jvpnews.com/srilanka/73990.html
Geen opmerkingen:
Een reactie posten