தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

மட்டக்களப்பு காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு- மட்டக்களப்பில் சட்டவிரோத சிகரெட் தொகை கண்டுபிடிப்பு



அளுத்கம சம்பவங்கள்: வழக்குத் தாக்கல் செய்ய தயாராகும் முஸ்லிம் காங்கிரஸ்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 11:06.51 AM GMT ]
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் நடந்த மோதல்கள் காரணமாக ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து சட்ட மா அதிபரிடம் முறைப்பாடுகளை செய்த பின்னர், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் காரணமாக இரண்டு பிரதேசங்களையும் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு பாரிய சொத்து அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு விபரங்கள் முன்வைக்கப்படும்.
வழக்கை தாக்கல் செய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagt6.html

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக மீண்டும் பா.உறுப்பினர் சிறீதரன்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 10:33.04 AM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் தலைமைபீடத்திலிருந்து சிரேஸ்ட தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், கட்சியின் பொருளாளார் கனகசபாபதி, நிர்வாக செயலர் குலநாயகம் ஆகியோரும் வடமாகாண சபையின் அமைச்சர் த.குருகுலராஜா, வடமகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
முன்னைய செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான பசுபதிப்பிள்ளை கடந்த ஆண்டுகளில் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையினை சபையில் சமர்ப்பித்ததை தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின்  கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவராக மீண்டும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவர்களாக பொன்.காந்தன் மற்றும் பூநகரியைச் சேர்ந்த செல்வராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
செயலாளராக மா.சிவபாலனும் பொருளாளராக சிறீரஞ்சனும் உப செயலாளராக பச்சிலைப்பள்ளியை சேர்ந்த மைக்கல் பிரான்சிஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக,
செ.புஸ்பராசா-கண்டாவளை பிரதேச செயலர் பிரிவு
சி.சிதம்பரநாதன்- கண்டாவளை பிரதேச செயலர்பிரிவு
விஜியகுமார் லட்ஸ்மன்-பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவு
கிருஸ்ணன் வீரவாகுதேவர்-பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவு
இ.பொன்னம்பலநாதன்-கரைச்சி பிரதேசசெயலர் பிரிவு
ப.சந்திரபாலன்-கரைச்சி பிரதேசசெயலர் பிரிவு
வ.நகுலேஸ்வரன்-கரைச்சி பிரதேசசெயலர் பிரிவு
தி.சிவமாறன்-கரைச்சி பிரதேசசெயலர் பிரிவு
விஜயசிங்கம் நிதர்சினி-பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவு
க.பிரபாமணி-கரைச்சி பிரதேசசெயலாளர் பிரிவு
அ.ஜயம்பிள்ளை-பூநகரி பிரதேசசெயலர் பிரிவு
வ.பாஸ்கரன்-பூநகரி பிரதேச செயலர் பிரிவு
சி.கதிர்மகன் -அக்கராயன் 
மற்றும் பொ.கிருபாகரன், பெ.குமாரசிங்கம், ஜெ.சிவகௌரி, நடராசா வனிதா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு கலந்துகொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரான பேராசிரியர் சிற்றம்பலம் உரையாற்றும்போது,
போர் நடைபெற்ற காலத்தில் மண்ணோடு மண்ணாக போராடியவர்கள் நீங்கள். அடிப்படை வசதிpகள் இன்றி அனைத்தும் இழந்து சளைக்காது வாழ்ந்த வீரவுணர்வுள்ளவர்கள் நீங்கள். அகதி வாழ்வை தொடர்ந்து எதிர்கொண்டு வாழ்ந்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் நாங்கள் ஒருமித்த உணர்வுள்ளவர்கள்.
இங்க வந்துள்ள பெண்களின் வார்த்தைகளையும் அதில் பொதிந்திருக்கும் அர்த்தங்களையும் சிந்தித்து பார்க்கின்றபோது தமிழரசுக்கட்சியின் மகளிர் தலைவியாக இருந்த மங்கையர்கரசியாரை நினைவு வருகின்றது.
அக்காலத்துக்கு நிகரானது இது. இன்று கட்சிக்குள் ஜனநாயக பண்புகள் அருகிவருகின்றன. ஆனால் முன்பிருந்த எமது மூத்த தலைவர்களான தந்தை செல்வா அமிர்தலிங்கம் போன்றவர்கள் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்புகளை பேணியிருந்தனர்.
தந்தை செல்வா மற்றவர்களின் கருத்துக்களை மிகவும் கேட்டு முடிவெடுக்கக் கூடியவர். அதனால் தான் இன்று அந்த அடித்தளம் இன்று வரை இந்த கட்சியை கட்டிக்காக்கின்றது.
தந்தை செல்வா ஒருபோதும் தன்னால் தான் எதுவும் முடியுமென்று சொல்லவில்லை. அவர் அன்று சொன்னார் எமக்கு பிறகு எம்மைவிட திறமையானவர்கள் வருவார்கள் அவர்களின் கையில் இந்த இலட்சியத்தை கையளிக்கவேண்டும்.
உங்களுக்குத் தெரியும் அந்த இலட்சியம் எப்படி கையளிக்கப்பட்டது. அது முள்ளிவாய்க்கால் வரை சென்றதும் இன்று எமது உரிமை பிரச்சினை சர்வதேசமயப்பட்டிருப்பதும் அறிவீர்கள்.
இப்போது நாம் அவதானமாக இருக்க வேண்டும். எமது பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலும் கட்சி ஜனநாயக பண்புகளை பேணி கருத்தறிந்து இறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagt5.html
கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்ட பரிதாபம்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 11:29.19 AM GMT ]
அக்கரைப்பற்று கடலுக்கு குளிக்கச் சென்று காணாமற்போன சிறுவன் இன்று சனிக்கிழமை காலை 6 மணியளவில் அக்கரைப்பற்று கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அப்துல் மஜீத் முஹமத் சமுகான் (வயது 14) என்ற அக்கரைப்பற்று பதுர் நகரைச் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
உயிரிழந்த சிறுவன் சக நண்பர்கள் இருவருடன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் அக்கரைப்பற்று கடலுக்கு குளிக்கச் சென்றுள்ளார். 
கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது உயிரிழந்த சிறுவன் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போயுள்ளார். இதனை அறிந்த நண்பர்கள் இருவரும் கரைக்கு வந்து கடலில் மூழ்கி காணாமற்போன சிறுவனின் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர். 
இதனையடுத்து குடும்பத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இன்று சனிக்கிழமை காலை சிறுவனின் சடலம் குறித்த கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagt7.html
மட்டக்களப்பு காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு- மட்டக்களப்பில் சட்டவிரோத சிகரெட் தொகை கண்டுபிடிப்பு
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 11:38.45 AM GMT ]
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப் பகுதியில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்களை இன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ- 56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 7 மகஸின்கள் மற்றும் 250 தோட்டாக்கள் என்பவற்றையே பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பயிர்ச் செய்கைக்காக காட்டுக்கு தீ வைத்தபோதே மேற்படி ஆயுதங்கள் வெளிப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் சட்டவிரோத சிகரெட் தொகை கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகை ஒன்றை கைப்பற்றியதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த லொறியில் இந்த சிகரெட் தொகை எடுத்துச் செல்லப்பட்டது. லொறியில் இருந்து 800 சிகரெட் பண்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் இவர்கள் மட்டக்களப்பு ஓட்டமாடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLaguy.html

Geen opmerkingen:

Een reactie posten