தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

தந்தை செல்வா அஸ்ரப்பின் ஊடாக செய்ய நினைத்ததே தமிழ்- முஸ்லிம்களுக்கு விடிவு தரும்: சி.சிறீதரன் எம்.பி!


ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக்க ஹக்கீம் ஒருபோதும் விடமாட்டாராம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 07:12.55 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை யுத்தக் குற்றக் கைதியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையாம் எனத் திட்டவட்டமாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு கொழும்பில் நடைபெற்ற மு.காங்கிரஸின் 25வது பேராளர் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இனக்கலவரம் உருவெடுத்தது. இந்த காட்டுத் தர்பார் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் வெளியாகின்றது.
அதாவது அடுத்த வரும் ஆறு மாத காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் மு.கா ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்குமாம். ஹக்கீம் இப்படிப் பேசுகின்ற போதுதான் முஸ்லிம்கள் மீது காட்டுத் தர்பார் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.
ரோம் நகரம் பற்றி எரிகின்ற போது அந்த நகரத்தின் மன்னன் பிடில் (இசைக் கருவி) வாசித்துக் கொண்டிருந்தானாம்.
பல்லாண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இந்தக் கதையை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இப்போது நாம் செயல்முறையில் ஹக்கீம் மூலமாக தெளிவாக அறியக் கூடியதாகவுள்ளது.
இந்தப் பிடில் கதை போன்றுதான் ஹக்கீமின் பேச்சும், நடவடிக்கைகளும் ,செயல்பாடுகளும் உள்ளது. முஸ்லிம் மக்களும் அந்த மக்களின் கடைகளும் உடமைகளும் தீயிட்டும் அடித்து உடைக்கப்பட்டும், உயிர்கள் கொல்லப்பட்டும் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஹக்கீம் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பாராம். அரசாங்கத்திற்கு அசௌகரியப்படுத்தை ஏற்படுத்த மாட்டாராம். இதற்கு மேலும் மு.கா அரசில் இருப்பதா, இல்லையா என்பது பற்றி மு.கா உயர் பீடம் கூடினார்களாம். அரசில் இருந்து மு.கா விலகுவதா இல்லையா என்பது குறித்து ஹக்கீம் முடிவெடுப்பாராம். அதற்கான அதிகாரத்தை உயர்பீடம் ஹக்கீமுக்கு வழங்கியுள்ளதாம்.
கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம்கள் மீது இந்தக் காட்டுத் தர்பார் நடைபெற்று வருகின்றது. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு வருகின்றது. அப்போதெல்லாம் மு.காங்கிரஸின் உயர் பீடம் கூடும் கலையும். எதுவுமே நடக்காது.
எது நடந்தாலும் ஹக்கீம் தனது அமைச்சை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். முஸ்லிம்கள் அழிந்தாலும் தான் அரசை விட்டு விலகமாட்டேன் என்பதும் அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த மாட்டாராம் என்பதும் ஒரு வக்களத்து இல்லையா.
ஹக்கீமின் இந்தக் கருத்தும் ரோம் நகர மன்னரின் பிடில் வாசிப்பும் ஒரே மாதிரியாக இல்லையா. இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக ஹக்கீம் தன்னாலான முழுப் பலத்தையும், சக்தியையும் பிரயோகித்து வருகின்றார்.
முஸ்லிம்களுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் ஹக்கீம் ஊடகங்களுக்கு தரும் ஒரு ரெடிமேட் வார்த்தை இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்காக நான் வெட்கப்படுகின்றேன் என்ற கருத்தை வெளியிடுவார். தட்டிக் கேட்க வக்கில்லையாம் வெட்கப்படுகின்றேன் என்றால் சரியாகி விடுமா? இதெல்லாம் புளித்துப் போன மோர். ஆறிப் போன அப்பம்.
ஜனாதிபதி மஹிந்தவை ஹக்கீம் காப்பாற்ற முடியுமா?
ஜனாதிபதி மஹிந்தவைக் காப்பாற்ற ஹக்கீம் கிளம்பிட்டராய்யா கிளம்பிட்டாரு. ஹக்கீம் நினைப்பது போன்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் என்பது கிராம நீதி மன்றமல்ல. ஹக்கீம் போய் பிணையெடுக்கும் அளவுக்கு மனித உரிமை ஆணையம் அவ்வளவு தரங்கெட்ட ஆணையமல்ல.
வடக்கில் நடந்தேறியது இன அழிப்பு என்பதற்கான பல வகையான ஆதாரங்களும் ஆவணங்களும் உலகம் முழுவதும் உள்ளது புலம் பெயர் தமிழர்கள் அவைகளை மனித உரிமை ஆணையத்திடம் கையளித்துள்ளார்கள்.
தமிழர்களை அழித்து விட்டோம் முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்றுதான் இந்த அரசு செய்து வருகின்றது. இது புரியாமல் உள்ளதா.உலகம் உஷாராகவுள்ளது.
ஹக்கீம் இல்ல, ஹக்கீம் வகையறாக்கள் என்ன கும்மாளமடித்தாலும் சர்வதேச விசாரணையும் போர்க்குற்றமும் இலங்கை மீது தவிர்க்க முடியாத ஒன்றுதான். காலம் சென்றாலும் சர்வதேச விசாரணை நடக்கும்.போர்க்குற்ற விசாரணை ஊர்ஜிதமானால் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு இங்கு நடக்கும் என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றோம்.
காலம் கடக்கும். இதில் பொறுமைதான் வெற்றி. இதெல்லாம் நடக்குமா என்று இந்த முஸ்லிம் வகையறாக்கள் நையாண்டி பண்ணுவது போன்றெல்ல. ஒருநாள் காலம் கனியும்.
வடக்கில் இன அழிப்பு
ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்களை அழித்துள்ள இந்த அரசு மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை மு.கா நிறைவேற்றியிருக்க வேண்டும்.
தமிழர்களுக்கு நடந்துள்ள கொடுமை முஸ்லிம்களுக்கும் நடக்க மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. இன்று நடப்பது என்ன? அத்துடன் இது முடியக் கூடிய விடயமா?
மனித உரிமை மீறல்கள் என்பது முஸ்லிம்களுக்கும் நடந்த பின்புதான் முஸ்லிம்கள் பட்டுத் தேறுவார்களாயின் அதுவும் தற்போது நடந்துள்ளது. இனிமேல் சிங்கள மக்களோடு முஸ்லிம்கள் இணக்கமாக வாழமுடியாது. அந்தளவுக்கு பொதுபலசேனா சிங்கள மக்களிடம் விஷம் ஊட்டி வருகின்றது. இந்த விஷம் நாடு முழுவதும் பரவலாமேயொழிய இணக்கம் என்பது அரிதுதான்.
ஆனால் முஸ்லிம்களுக்கான சேதாரம் என்பது மிகவும் மோசமாக இருக்கும் முஸ்லிம்கள் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேணாமா? முஸ்லிம்களின் இந்த இன அழிப்பு முன்னோட்ட விவகாரம் சர்வதேச மயமாக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேசத்தின் கதவுகளை தட்டப்படாதவரை முஸ்லிம்களுக்கு இன்னும் அதிகமாக நடக்கலாம். முஸ்லிம்களுக்காக யார் கேட்பது. இந்த தகிடுதத்திகள் மேலும் மேலும் முஸ்லிம்களை விற்று விடுவார்கள். இல்லை விற்று விட்டார்கள். விற்கப்பட்டவர்கள் அடிமைகள்.
அளுத்கமவில் எரிந்து மிஞ்சியுள்ளவர்களையும் வாக்களிக்க வேண்டும் மு.கா ஆட்சிப்பங்காளியாக வேண்டும் என்று வாக்கு வேட்டையில் விரைவில் இறங்குவார்கள் இந்த ஒட்டுண்ணிகள். எத்தனையோ பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு விட்டது இன்று முஸ்லிம்கள் கொல்லபட்டுள்ளர்கள் அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டுள்ளது எந்த முஸ்லிம் நாடாவது ஒரு கண்டனம் தெரிவித்துள்ளதா?
அப்படியானால் இலங்கை முஸ்லிம்கள் இன்னும் சிங்கள தேசத்தையும் சிங்களப் படையினரையும் நம்பிக் கொள்ள முடியுமா. சிங்கள மக்களை விட படையினர்தான் அத்தனை அட்டூழியங்களையும் செய்துள்ளார்கள் என்று சம்பவத்வில் சிக்குண்டவர்கள் விபரிக்கின்றார்கள்.
தமிழர் கல்வி மீதும், முஸ்லிம் வர்த்தகம் மீதும் பொறாமை
முஸ்லிம்களின் வர்த்தகத்தின் மீதும், தமிழர்களின் கல்வி மீதும் சிங்களத்திற்கு ஏகப்பட்ட பொறாமை, வயிற்றெரிச்சல். அதனால்தான் அப்போது யாழ்ப்பாணத்தில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இப்போது முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் வருகின்றது.
இலங்கையில் சிறுபான்மை இனங்கள் வாழ முடியாது என்பதற்கு கடந்தவார அளுத்கம சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றது.
இது முடிவில்லாத ஒரு தொடர். இந்தத் தொடருக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் ஊடாகத்தான் ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகவும் இறுதிச் சந்தர்ப்பமாகவும் ஜெனீவாவைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த நோக்கில்தான் முஸ்லிம்களும் ஜெனீவாப் பிரேரணையை வடகிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் மறைமுகமாவது ஆதரிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் எழுதியிருந்தோம்.
அதைவிட்டு நாங்கள் அரசைக் காப்பாற்றுவோம், அரச தலைவர்களைக் காப்பாற்றுவோம் என்பது தனது கண்ணை தான் குற்றுவது போன்றல்லவா உள்ளது.
தற்போதைய தமிழ் கூட்டமைப்பு வாதாடும், போராடும் உரிமை என்பது முஸ்லிம் மக்களுக்காகவும்தான். இந்த உரிமையைத்தான் கூட்டமைப்பு வாதாடியும் போராடியும் வருகின்றது. முஸ்லிம்கள் பட்டுத் தேறும் நிலைக்கு வந்துள்ளார்கள்.
அளுத்கமவில் நடந்துள்ள இந்த காட்டுத் தர்பார் மனித உரிமை மீறல் இல்லையா, இந்த மீறலை யார் தட்டிக் கேட்பது.இந்த வகையான காட்டுத் தர்பார்கள் இனிமேலும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் கூட்டமைப்பு வாதாடியும்,போராடியும் வருகின்றது.
இப்படியே ஒவ்வொரு ஊராக முஸ்லிம்களின் வீடுகள் கடைகளையும் எரித்து நாசமாக்கட்டும், வடகிழக்கில் தமிழர்களை கொன்று அழித்து ஒளிக்கட்டும் இந்த வகையறாக்கள் ஊடகத்தில் மட்டும் கொக்கரிக்கட்டும். அளுத்கம சம்பவத்திற்காக ஒரு கண்டனம் வெளியாகும்.
அளுத்கம சம்பவமும் இன அழிப்புக்கான ஒரு ஒத்திகையே. விரைவில் ஒத்திகை அரங்கேறலாம். அப்போதும் இந்த வகையறாக்கள் அரசுக்கு வக்காளத்துதான் வாங்குவார்கள். ஆட்சிப் பங்காளியாகி இருப்பார்கள். இல்லை முழு அமைச்சும் அரை அமைச்சும் பெற்றிருப்பார்கள்.
இந்த தகிடு தத்திகளைச் சொல்லி எந்தக் குற்றமும் இல்லை. வாக்களிக்கும் மக்கள்தான் திருந்த வேண்டும். திரும்ப வேண்டும்.அரசை விட்டு விலகமாட்டேன் என்ற அடம் பிடிப்பும் இன்று முஸ்லிம் மக்களை அடிமையாக்கி விட்டது. அரசுக்கு அசளெகரியத்தை மு.கா ஏற்படுத்த மாட்டாதாம் என்று ஹக்கீம் தெரித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீதும் இப்படியான காட்டுத் தர்பார் வன்முறைகளே ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்டு வந்தது.அப்போதெல்லாம் நாம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
மனித உரிமை மீறல்கள் யாருக்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் இனமாக முஸ்லிம்கள் இல்லை. இந்த நாட்டு முஸ்லிம்கள் யாரை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியுள்ளது.
தமிழ் மக்களுடன் இணக்க அரசியல் ஒன்று நடந்திருக்குமாயின், முஸ்லிம்கள் மீது இன்று நடைபெற்று வரும் இந்த காட்டுத் தர்பார் உலக அரங்கில் ஒலித்திருக்கும்.
முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் ஒரு இணக்க அரசியலில் இருந்திருந்தால் இந்தக் காட்டுத் தர்பார் லண்டன் உட்பட ஐரோப்பா முழுவதும் ஆர்ப்பாட்டத்தால் இந்த அரசுக்கு ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கியிருக்கும்.
சர்வதேசத்தின் அழுத்தங்களால், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு மற்றும் சர்வஜன வாக்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வாக்களிப்பில் உலகம் முழுவதும் பரந்து வாழும் 10 லட்சம் ஈழத் தமிழன் வாக்களிப்பான்.
அப்போது இந்த ஹக்கீம் இந்த அரசையும் ஆட்சியாளர்களையும் காப்பாற்றுவாரா முடியுமா? நடக்குமா? ஐ.நா ஆணையம் என்ன தகிடுதத்திகளின் தங்கு மடமா?
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
அடிவாங்கியது போதாது! அதிகாரப் பதவி வேண்டும்: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 08:02.28 AM GMT ]
பேரினவாத வெறியாட்டங்களை அனுமதிக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி வழிகாட்டலின் கீழ் பொதுபல சேனா போன்ற இனவாதிகள் வன்செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் சிதறி வாழும் முஸ்லிம்கள் உயிர் மற்றும் உடைமை இழப்புகளைச் சந்தித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் முஸ்லிம்களின் பாதிப்புகளின் போது உரிய முறையில் எதிர் நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத வெறியாட்டத்தை முன்னெடுக்கும் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த அவர்கள் தயாராகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதத்தில் இன்றைய ரன்திவ பத்திரிகையும் முன்பக்க செய்தியாக தகவல்ளை வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த நான்கு உறுப்பினர்களின் மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தந்தை செல்வா அஸ்ரப்பின் ஊடாக செய்ய நினைத்ததே தமிழ்- முஸ்லிம்களுக்கு விடிவு தரும்: சி.சிறீதரன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 08:26.39 AM GMT ]
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது தெரிவித்துள்ளதாவது,
அன்று 1956களில் சிங்கள காவல்துறை பார்த்திருக்க சிங்கள காடையர்களால் பெரும் வன்முறைகள் நடத்தப்பட்டதோ இன்று அது முஸ்லிம்கள் மீது அரங்கேற்றப்பட்டுள்ளது.
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து வடக்குக் கிழக்கில் ஒரு தீர்விற்காக பயணிக்க வேண்டிய காலத்தை சிங்கள பேரினவாதம் எம்மிடம் தந்திருக்கின்றது.
அன்று தந்தை செல்வா அவர்கள், தன் பாசறையில் வளர்ந்த முஸ்லிம் பெரும் தலைவர் அஸ்ரப்பிடம் அம்பாறையை மையமாக வைத்து ஒரு முஸ்லிம் அலகை உருவாக்க நினைத்தார்.
இன்று அந்த நோக்கத்தின் தேவையை உணரமுடிகின்றது. மொழியால் ஒன்றுபட்ட எம்மை இலங்கையில் பௌத்த பேரினவாதம் அழித்தொழிக்க முனைகின்றது என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten