எனவே பிரித்தானியர்களை உளவு பார்க்க அரச தகவல் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. இவ்வாறான ஊடுருவல்களை வாரண்ட் இல்லாமலே மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது. பிரித்தானிய பயங்கராவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு தலமை அதிகாரி சாள்ஜ் பார் இத்தகைய தகவல் சேகரிப்பு அனைத்தும் வெளியக தொலைத் தொடர்பாடல் என்கிறார். அப்படியானால் தனிநபர்களினால் வெளிவிடப்படும் கருத்துக்களுக்கு அரசாங்கத்தினால் எதுவித இறுக்கமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்கின்றார்.
இவ்வாறு தனி நபர் வெளிவிடும் கருத்துக்களை அவதானிக்கும் உளவுப்பிரிவு குறித்த அந்த நபர் பயங்கரவாதத்துடன் அல்லது மிகவும் மோசமான குற்றச் செயலுடன் தொடர்புடையவர் என்று கருதும் பட்சத்தில் அவரை கைது செய்ய அமைச்சர் அனுமதியளிப்பார். வெளியக தகவல் தொலைத் தொடர்பு எனும் வகைக்குள் கடல் கடந்த தகவல் பரிமாற்றமான பேஸ்புக் ருவிற்றர் யுரியூப் கூகிள் ஊடாக தேடல்கள் இணைய மின்னஞ்சல் சேவைகளான் ஹொட்மெய்ல் யாகூ அனைத்துமே அடக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அமைச்சரின் அனுமதியின்றி தகவல்கள் சேகரிக்கலாம்.
இது பற்றி கருத்து கூறிய மனித உரிமை ஆர்வலர் தெரிவிக்கையில் அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் கூகிள் பேஸ்புக் போன்றனவற்றின் ஊடாக தகவல் பரிமாற்றங்களை வாசிக்க ஆய்வு செய்ய கேட்க பாதுகாப்பு நிறுவனங்கள் உரித்துடையவை என்றும் குறிப்பிட்டார். எட்வேட் ஸ்னோடனால் பிரித்தானியா தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களின் விளைவே இது என்றும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
இணையம் ஊடான மொத்த தகவல் பரிமாற்றத்தில் 1.6 வீத தகவல் சேகரிக்கப்படுகின்றது. அதிலும் சொற்களின் வகையில் 0.025 வீத தவல்களே மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதிலும் 0.00004 வீதமான தகவல்களே உளவு நிறுவனங்களினால் நடடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது
http://www.athirvu.com/newsdetail/184.html
Geen opmerkingen:
Een reactie posten