தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தால், பிரிட்டிஷ் பாஸ்போர்ட், பிரஜாவுரிமை கேன்சல் !
[ Jun 18, 2014 03:45:39 PM | வாசித்தோர் : 7660 ]
இவர்களில் சிலர், தற்போது ஈராக்கில் கடுமையாக யுத்தம் புரியும், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் சிரியா ஆபரேஷனில் யுத்தம் புரிகிறார் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விடையம் பிரித்தானியாவை பெரிதும் பாதித்துள்ளது. பிரித்தானியாவில் குறிப்பாக முஸ்லீம்கள், பிரித்தானிய பாஸ்போட்டை எடுத்துவிட்டு பின்னர் ஈராக்கில் சென்று தீவிரவாதிகளுடன் இணைகிறார்கள்.
இதற்கு முன்னரும் பிரிட்டன் தமது நாட்டு பிரஜைகள் சிரியாவில் யுத்தம் புரிவதாக தெரிகிறது என்று கூறியுள்ள போதிலும், இவ்வளவு எண்ணிக்கையில் ஆட்கள் அங்குள்ளார்கள் என தெரிவித்ததில்லை. “அவர்களது பிரஜாவுரிமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை பிரிட்டிஷ் அரசு கேன்சல் செய்தபின் அவர்களால் பிரிட்டனுக்கு திரும்பி வர முடியாது. பிரிட்டனில் அவர்களால் ஏற்படக்கூடிய தீவிரவாத அச்சுறுத்தலை இல்லாது செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம்” எனவும் அவர் கூறியுள்ளார். வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹோக் கூறியுள்ள இக் கருத்துக்கள் மிகவும் கடுமையாக உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/175.htmlபின் லேடனை பாக்கிஸ்தானுக்குள் புகுந்து, சுட்டுக்கொன்ற அமெரிக ஆப்பரேஷனுக்கு பின்னர்,
[ Jun 19, 2014 05:20:39 AM | வாசித்தோர் : 27520 ]
இந்த கடத்தல் எவ்வாறு நடந்தது ? வாருங்கள் சுவாரசியமான விடையத்திற்கு போகலாம் !
அமெரிக்க தூதரகத்தை எரித்து, எரிந்துகொண்டு இருக்கும் தூதரகம் முன்னால் கம்பீரமாக போஸ் கொடுத்த ஆள் தான் இந்த அபு கத்தாலா. இவர் சில வருடங்களாக லிபியாவில் தான் வாழ்ந்து வருகிறார். அமெரிக்கா இவரை நாடு கடத்தும் படி பல முறை கேட்டது. ஆனால் அது நடக்கவில்லை. தமது நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக அவர் மீது வழக்கு போடுவோம் என்று லிபியா அறிவித்தது. ஆனால் அது நடந்த பாடாக இல்லை. அபு கத்தாலா மிகவும் சுதந்திரமாக பென்காசி நகரில் வசித்து வந்தார். பலத்த பாதுகாப்பும் அவருக்கு இருந்தது. அமெரிககவை மிரட்டும் ஒரு நபராகவு, தனது சொந்த இடத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் அவர் இருந்தார். அவரை பென்காசியில் இருந்து தூக்கவேண்டும் என்று அமெரிக்க சி.ஐ.ஏ நிறுவம கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முடிவெடுத்துவிட்டது.
இறுதியாக அவர்கள் அனைவரும் லிபியா சென்று, அங்கே 3 வாகனங்களை எடுத்து பென்காசியில் உள்ள அபு கத்தாலா வீட்டுக்குச் சென்று சுமார் 60 நொடிகளில் அவரை கைதுசெய்து அங்கிருந்து கொண்டுசென்றுவிட்டார்கள். இங்கே நாம் தந்துள்ள வீடியோவைப் பாருங்கள். அவ்வளவு தான் நடந்துள்ளது. அங்கே நின்ற காவலாளிகள் எவரும் சுடவும் இல்லை, சுடக் கூடிய சந்தர்பத்தை டெல்டா படையினர் ஏற்படுத்தவும் இல்லை. குறிப்பாக அனைத்து காவலாளிகளையும் ஒவ்வொருவராகப் பிடித்து மயக்கமடைய வைத்துள்ளார்கள். அங்கிருந்து அபு கத்தாலாவை கொண்டு சென்று, அமெரிக்க கடற்படை கப்பலான (USS New York) க்கு கொண்டுசென்றுவிட்டார்கள். இக் கப்பலில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளதாம். அதாவது அமெரிக்காவில் உள்ள இரட்டைக் கோபுரத்தை பின் லேடன் தகர்த்தவேளை அவை இரண்டும் விழுந்து மண்ணோடு மண் ஆனாது. ஆனால் அதில் உள்ள இருப்புகளை எடுத்து அமெரிக்கா , இந்த போர் கப்பலை செய்துள்ளதாம்.
அந்தக் கப்பலுக்கே அபு கத்தாலாவை தற்போது கொண்டுசென்றுள்ளார்கள். இங்கிருந்து அவர் அவரை அமெரிக்கா கொண்டுசெல்ல இருக்கிறார்கள். ஆனால் இச்செயலானது லிபியாவை ஆத்திரமூட்டியுள்ளது. சம்பவ தினத்தன்று கூட 2 அமெரிக்க உளவு விமானங்கள் பென்காசி நகரின் மேல் இருந்துள்ளது. முழு ஆப்பரேஷனும் முடியும் வரை தரையில் உள்ளவர்களுக்கு வான் பாதுகாப்பு மற்றும் வானில் இருந்து வேவு தகவல் அனைத்தும் கிடைத்துள்ளது. ஒரு நாட்டிற்குள் புகுந்து, அன் நாட்டு இராணுவத்திற்கே தெரியாமல் இப்படி ஒரு காரியத்தை செய்வது என்பது மிகவும் பாரதூரமான விடையம். ஆனால் அமெரிக்கா இதனை நியாயப்படுத்தியுள்ளது. இருப்பினும் அபு கத்தாலாவை தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்று லிபிய தற்போது கோரியுள்ளதோடு அமெரிக்காவின் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளது. ஆனால் இந்த விடையம் தொடங்கி நடந்து முடியும் வரை எதனையும் லிபிய அரசு அறிந்திருக்கவே இல்லையாம். காலையில் செய்தியைப் பார்த்து தான் , தமது நாட்டு மண்ணில் இப்படி ஒரு கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது என்று அன் நாட்டு தலைவர்கள் அறிந்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/179.html
Geen opmerkingen:
Een reactie posten