அமெரிக்காவில் செப். 11 தாக்குதல் நடந்த 11-வது ஆண்டின் அதே தினத்தில், லிபியா பென்காசி நகரில் இருந்த அமெரிக்க தூதரகத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டனர். தூதரகம் எரிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை, தீவிரவாத இயக்கத்தினரே வெளியிட்டனர் – தமது வெற்றியை காட்டுவதற்காக! அந்த போட்டோக்களில், எரியும் தூதரகத்துக்கு முன்னால் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் நபர், லிபியா தீவிரவாத இயக்க தலைவரான அஹ்மத் அபு கத்தாலா என அடையாளம் கண்டுகொண்டது சி.ஐ.ஏ. இதையடுத்து அவரை ‘தூக்குவது’ என முடிவு எடுக்கப்பட்டது. அவரோ தொடர்ந்தும் லிபியாவிலேயே வசித்து வந்தார்.
இந்த நிலையில்தான், அமெரிக்க அதிரடிப்படை குழு ஒன்று ஹெலிகாப்டர் மூலம் லிபியாவுக்குள் புகுந்து அபு கத்தாலாவை தூக்கும் ஆபரேஷன் ஒன்று திட்டமிடப்பட்டது. அவரது நடமாட்டங்களை அறிய, லிபியாவுக்குள் இறக்கி விடப்பட்டனர் சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள். அவரது நடமாட்டங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்ட நிலையில், நேற்று முன்தினம் லிபியாவுக்குள் சென்று குதித்த அமெரிக்க அதிரடிப்படை குழு, அபு கத்தாலாவை உயிருடன் பிடித்தது என்ற விபரத்தை நேற்று மாலை வெளியிட்டது அமெரிக்கா. இந்த ஆபரேஷனுக்காக ஹெலிகாப்டரில் லிபியா சென்ற அதிரடிப்படை டீம், லிபிய அரசின் அனுமதியுடன் சென்றதா, இல்லையா என்பது தெரியவில்லை.
ஆனால், ஆபரேஷனுக்காக சென்ற அதிரடிப்படை டீம், பத்திரமாக புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்துவிட்டது எனவும், அபு கத்தாலா தம்மிடம் உயிருடன் உள்ளார் எனவும் அறிவித்துள்ளது அமெரிக்கா. தற்போது இவர், லிபியாவுக்கு வெளியே பெயர் குறிப்பிடப்படாத நாடு ஒன்றில் அமெரிக்க அதிரடிப்படையின் பாதுகாப்பில் உள்ளார். அந்த நாடு, எந்த நாடு என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அது பெரும்பாலும் ஜோர்தானாக இருக்கலாம் என ஊகிக்கலாம். அபு கத்தாலா அநேகமாக இன்று, அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தெரிகிறது. தீவிரவாத இயக்க தலைவரையே அமெரிக்கர்கள் அதிரடியாக தூக்கியதில், தீவிரவாத இயக்கம் கடும் அதிர்ச்சியில் இருக்கும். அதையடுத்து அவர்கள் லிபியாவுக்கு உள்ளேயோ, வெளியேயோ பெரிய தாக்குதல் ஒன்றில் ஈடுபட வாய்ப்பு உள்ளது!
http://www.athirvu.com/newsdetail/174.html
Geen opmerkingen:
Een reactie posten