யாழில் வனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொழில் நுட்ப்ப கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அங்கே படித்து வரும் காலப் பகுதியில் அவருக்கு ஒரு திருமணத்தைச் செய்துவிடவேண்டும் என்று இவரது பெற்றோர்கள் அலைந்து திரிந்துள்ளார்கள். இறுதியாக அவருக்கு ஒரு வரனையும் பார்த்துவிட்டார்கள். ஆனால் வனிதாவுக்கு அத்திருமணத்தில் இஷ்டமே இல்லை. காரணம் அவர் கல்வி கற்கும் தொழில் நுட்ப்ப கல்லூரியில் உள்ள ஆசிரியர் ஒருவர்மேல் அவர் காதல் வயப்பட்டு, பார்க் பீச் என்று சுற்றி திரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து பெற்றோர் செய்துவைக்க நினைக்கும் கலியாணத்தை எவ்வாறு குழப்பினார்கள் என்று தெரியவேண்டுமா ? அதாவது காதலன்(ஆசிரியர்) பெற்றோர் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை விடுத்து, உங்கள் மகள் அதி விசேட சித்திபெற்று பரீட்சையில் பாஸ் ஆகியுள்ளார் என்று கூறியுள்ளார்.
அதனால் வனிதாவுக்கு கலியாணத்தை இப்போது செய்யவேண்டாம் என்றும், அவர் தொடர்ந்தும் படிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளதோடு, தமது கல்லூரி சட்ட திட்டப்படி கலியாணமான பெண்கள் கல்வி கற்க முடியாது என்றும் ஒரு போடு போட்டுள்ளார். இதனை நம்பி கலியாணத்தை நிறுத்திய பெற்றோர், தமது மகள் விசேட சித்திபெற்றதாக நினைத்து ஆனந்த கூத்தாடியுள்ளார்கள். இதனை நம்பிய இந்தப் பாமரப் பெற்றோர் ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்து, ஆலயத்திற்கும் கூழ் காய்ச்சி தங்கள் ஆனந்தத்துடன் ஆண்டவனின் ஆசியையும் பெற்றுள்ளனர். அத்துடன், தங்களால் காய்ச்சிய கூழை அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்டு மகிழ்ந்துள்ளனர்.
தனது மகள் முதலிடத்தில் சித்தியடைந்ததையிட்டுப் பெருமையடைந்த பெற்றோருக்கு இது அனைத்தும் காதல் எனும் காமலீலையால் தங்களது மகள் நடத்திய திருவிளையாடல் என்பதை அவர்கள் அறியவில்லை. திருமணத்தையும் நிறுத்தி, கோவிலுக்கு கூழ் காச்சியதுதான் மிச்சம். இதேவேளை வனிதா குறித்த ஆரிசியரோடு தொடர்பில் உள்ள விடையம் , வீட்டுக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அந்த ஆசிரியர் பின்வாங்கி ஓடிவிட்டார். இதனால் காதலும் முறிவடைந்துள்ளது. மேலும் அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்ற தகவல்களும் அடுத்தடுத்து பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. யாழில் நடக்கும் கலாச்சார சீரழிவு ! அதி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் இல்லாத ஈழம் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6925
Geen opmerkingen:
Een reactie posten