தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

இலங்கைத் தமிழர்களுக்காக விஜயகாந்த் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை



மாணவிகளை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியமைக்கு கண்டனம்
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 04:49.04 PM GMT ]
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் முன் வாசல் கதவை பூட்டி மாணவிகளை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியமை மனித உரிமையை மீறும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மகாஜன கல்லூரியின் வாசல் கதவை பூட்டி பாடசாலைக்கு வருகை தந்த மாணவிகளை வீதியில் இறக்கி போராட்டத்தில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையான மகாஜன கல்லூரி மாணவர்களை வலுக்கட்டாயப்படுத்தியும், பயமுறுத்தியும் பாடசாலை நிருவாகத்திற்கெதிராக சிலர் செயற்பட்டுள்ளார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் கொழும்பில் பயிற்சி நெறியொன்றில் கலந்து கொண்டிருந்த வேளை பாடசாலை நிருவாகத்திற்கு எதிரான குழுவினர் துண்டுப் பிரசுரங்களை மாணவரிடையே விநியோகித்ததோடு, அதிபரின் அனுமதியின்றி ஞாயிற்றுக் கிழமை தனியார் கட்டடமொன்றில் பெற்றோர்களை அழைத்து திங்கட்கிழமை பாடசாலை முன்பாக ஒன்றுகூடுமாறு அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை கல்லூரியின் முன் வாசல் கதவை பூட்டி பாடசாலைக்கு வருகை தந்த மாணவிகளை வீதியில் இறக்கி போராட்டத்தில் ஈடுபடுத்துமாறு பயமுறுத்தப்பட்டதோடு ஆசிரியர்களின் தொழில் அந்தஸ்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார்கள்.
பாடசாலையில் முன்றலில் செய்வதறியாது திகைத்து நின்று பெற்றோருடன் வீடு செல்ல ஆயத்தமான மாணவர்களை அச்சுறுத்தியதோடு, மாணவர்கள் கடும் மன உளச்சலுக்கு உட்படுத்தப்பட்டதோடு குறித்த குழுவினர் மாணவிகளை தொட்டு தள்ளியுள்ளார்கள்.
இச்சம்பவங்களுக்கு ஒரு சில குழுவினர் தலைமை தாங்கியதோடு கடந்த காலங்களில் அதிபரையும் இக்குழுவினர் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களின் பிண்ணனியில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியொருவர் உள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
மஹிந்தோதய ஆய்வு கூடத்தினை திறப்பதில் அதிபர் ஒத்துழையாததை முன்னிலைப்படுத்தி, அரசியல் நிகழ்ச்சி நிரலை கல்லூரியில் செயற்படுத்துவதற்கு ஒத்துழைக்காத ஆசிரியர்களையும் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் மாணவர்களை வற்புறுத்தி பகடைக்காயாக பயன்படுத்தியது இலங்கை அரசு கைச்சாத்திட்டுள்ள சிறுவர் சமவாயத்தின் அடிப்படை கோட்பாடுகளையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சாசனத்தையும் மீறும் செயல் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfv4.html
இலங்கைத் தமிழர்களுக்காக விஜயகாந்த் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 05:00.15 PM GMT ]
இலங்கையில் தமிழர்களின் நிரந்தர தீர்வுக்காக இந்திய மத்திய அரசாங்கம் முனைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் பாரதீய ஜனதா கட்சியின் பங்காளியுமான நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று இடம்பெற்ற கட்சிக்கூட்டத்தில் இந்தக்கோரிக்கைகளை விஜயகாந்த் முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியா, இலங்கையை நட்பு நாடாகவே கருதுகிறது. எனினும் இலங்கை அதனை மதிப்பதாக தெரியவில்லை.
இதன்காரணமாகவே தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், தமிழக மீனவர்களை காப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfv5.html

Geen opmerkingen:

Een reactie posten