[ புதன்கிழமை, 04 யூன் 2014, 02:11.48 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தியவருக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
யாழ். கொடிகாமம் பாலாவிப் பகுதியினைச் சேர்ந்த நபரொருவருக்கே சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.
கடந்த 2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அதேயிடத்தினைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை பாலாவி பகுதியிலுள்ள பற்றைக்குள் வைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சந்தேக நபரைக் கைது செய்த கொடிகாமம் பொலிஸார், அவருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்றும் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின்போது சந்தேக நபர், தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டதையடுத்து நீதவான் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfv0.html
காத்தான்குடியில் இரண்டு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 03:25.02 PM GMT ]
காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லாஹ் வீதியில் வசிக்கும் எஸ்.செய்னம்பு (39) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டினுள்ள மின் விசிறியில் புடவையில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் உயிரிழந்த நிலையிலேயே காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இந்த பெண்ணின் உறவினர்களிடத்திலும், கணவரிடத்திலும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfv2.html
13வது திருத்தம்! இலங்கையின் நிலைப்பாட்டை மோடிக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்: அரசாங்கம்
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 02:31.40 PM GMT ]
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என இலங்கை பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி கூறியதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் மறுநாள் டெல்லியில் நடைபெற்ற அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை கூறினார்.
டெல்லியில் இரண்டு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு பகுதியாக 13 வது திருத்தச் சட்டம் பற்றியும் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ரணில் விளக்கமாறு கோரினார்.
அனைத்து பிரச்சினைகள் பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாகவும் 13வது திருத்தம் பற்றி ஆழமாக கலந்துரையாடப்படவில்லை எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.
இலங்கை பிரதிநிதிகள் பார்வைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தினர். பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கையில் ஒருமித்த உடன்பாடு முக்கியமானது என வலியுறுத்தப்பட்டது.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை பகிர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் இந்தியாவிடம் மிகத் தெளிவாக தெரிவித்தோம்.
இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தாது. அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும்.
மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை தொடர்ந்தும் புறக்கணிக்காது அதில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfv1.html
Geen opmerkingen:
Een reactie posten