தேவரூபன் எனும் 27 வயது வாலிபர் கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறப்புமுகாமில் எந்தவித வழக்குகளுமின்றி அடைக்கபட்டுள்ளார். விடுதலை எப்போது என்றே தெரியாத இவர் தன்னை விடுதலை செய்யக்கோரி கடந்த ஜூன் 10ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தார்.
அப்பொழுது காவல் துறையினர் இவரை மிரட்டி உண்ணாவிரதத்தினை கைவிடவைத்தனர். இதில் மனமுடைந்த தேவரூபன் அளவுக்கதிகமான தூக்கமாத்திரகளை உட்கொண்டு மயங்கி சரிந்த அவரை காப்பாற்ற திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்....
காப்பாற்றபட்ட இவர் மீண்டும் திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட இருந்த நிலையில் தாசில்தாரை காணவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை ஏற்காத காவல்துறை ஆய்வாளர் நீலகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி விரும்பத்தகாத செயல்களை செய்ததால் மீண்டும் மனமுடைந்த தேவரூபன் கையினை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதற்கான காணொளி ஆதாரத்துடன் அடங்கிய செய்தியினை நமது தமிழ்வின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.
மேற்கூறிய சம்பவத்தினன்று நீலகண்டன் முதலுதவி செய்ய முன்வராத காரணத்தால் அவருடன் தேவரூபனுக்கு முதலுதவி செய்யகோரி வாக்குவாதம் நடத்தியதாக அப்பாவி அகதிகளாகிய சந்திரகுமார், ஈழநேரு, தர்மராஜா, உமாரமணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பார்த்தா ஆகியோர் மீது காழ்புனர்ச்சியுடன் திருச்சி கே.கே நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.
வழக்கின் விவரம் பின்வருமாறு....
வழக்கின் விவரம் பின்வருமாறு....
தூக்கமாத்திரை உட்கொண்டு திருச்சி மருத்துவமனையில் குணமாக்கப்பட்டு திரும்ப சிறையில் அடைக்க அழைத்துவந்த தேவரூபனை தங்களோடு அடைக்க கூடாதென்றும் அவருக்கு தனி அறை கொடுக்கவேண்டுமென்றும் கூறி தகராறு செய்ததாகவும்,
அப்பொழுது தேவரூபன் கையினை அறுத்துகொண்டு தற்கொலை முயன்றதாகவும் உடனே அவரை நீலகண்டன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அதனால் ஆத்திரமுற்ற முகாம் வாசிகள் கற்களைக்கொண்டு கொலை செய்யும் நோக்கில் போலீசாரை தாக்கியதாகவும் வழக்கினை பதிவுசெய்துள்ளார்.
முகாம் சிறைவாசிகள் மீது புனையப்படும் வழக்குகளில் அதிகமாக கற்களை கொண்டு தாக்கியதாகவே தமிழக காவல் துறையில் பதியபட்டுள்ளது. முகாம் சிறைகள் எப்பொழுதுமே தேவையற்ற குப்பைகளின்றி சுத்தமாகவே வைத்திருப்பர். அப்படியிருக்கையில் இங்கு கற்கள் எவ்வாறு வந்ததென்பது புரியவில்லை.
அவ்வாறே கற்கள் அங்கு இருந்தாலும் அநேகமான வழக்குகள் கற்களால் தாக்கப்படும் வழக்குகளாகவே இருக்கும் நிலையிலும் கற்கள் அகற்றப்படாமல் இருப்பது இதுபோன்ற பொய்வழக்குகளை அப்பாவிகளின்மீது பதியவே என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது...
மேலும், ஒருவருடமாக சிறையிலிருந்த அகதிகளில் ஒருவர் இரத்தவெள்ளத்தில் மிதக்கும்பொழுது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்களை கற்கள் கொண்டு தாக்கினர் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவது சாமான்யானுக்கும் சந்தேகம் வரும் வகையில் உள்ளது.
இவற்றை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பின் உச்சம்.
நாம் அறிந்த வகையில் நமது இணையத்தளம் காணொளி ஆதாரத்துடனும் காவல்துறை ஆய்வாளர் நீலகண்டன் அவர்களின் படத்தினையும் வெளியிட்ட செய்தியினால் நீலகண்டன் அடைந்த கோபத்தின் வெளிப்பாடே இந்த அப்பாவிகள் ஆறுபேர் மீதான பொய்வழக்கு என்பது உறுதியாக நம்பபடுகிறது.
இன்று காலை 10 மணியளவில் கைதான ஆறு அப்பாவிகள் மீதும் கொலைமுயற்சி ( ipc 307 )வழக்கு பதியப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.....
மேலும் திருச்சி சிறையில் இருக்கும் ஈழ உறவுகளிடம் பேசும் பொழுது...

ஆய்வாளார் நீலகண்டன் தங்கள் அனைவரையும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கூறி திட்டி துன்புறுத்துவதாகவும், இது போன்று நிகழ்வுகளை அவர் தொடர்ந்து செய்து வருவது அவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டுவதாகவும் இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.
இலங்கையில் பாதிக்கப்படும் நமது உறவுகள் தாய்த்தமிழகத்திலும் இதுபோன்ற மனச்சாட்சியற்ற அரசு அதிகாரிகளின் வன்மமான செயல்களால் பாதிப்புகளுக்கு உள்ளாவது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஈழத்தமிழர்கள் மீது தாயுள்ளம்கொண்டு அன்புசெலுத்தும் அரசு இயந்திரத்தின் உயர் அதிகாரிகள் நீலகண்டன் போன்ற அதிகாரிகள் அரசின் நற்பெயரினை கலங்கமாக்குவதை தடுப்பார்களா....?
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafv1.html
Geen opmerkingen:
Een reactie posten