[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 11:05.26 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரான பிரபல வர்த்தகர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டமைப்பு பாரதூரமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், அந்த மாவட்டத்தின் தொகுதி ஒன்றின் அமைப்பாளராக பொறுப்பேற்று கொள்ளுமாறும் அவர், முன்னாள் அமைச்சர் போகொல்லாமவிடம் கேட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போகொல்லாகம, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த அவர் கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக இருந்து வருகிறார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த அழைப்புக்கு போகொல்லாகம தெளிவான பதில் எதனையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafv0.html
நாட்டை மீண்டுமொரு சிவில் யுத்தத்தை நோக்கி இட்டுச் செல்ல முடியாது: சந்திரிக்கா
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 11:58.18 AM GMT ]
புத்த மத்தின் பெயரால், தமது தனிப்பட்ட குறுகிய நோக்கங்ளுக்காக செயற்படும் குழப்பங்களை ஏற்பத்தும் அடிப்படைவாதிகள் சிலர் நடத்திய மக்களை தூண்டும் ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பன இந்த மோதல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாக கூறும் சந்திரிக்கா, நடைபெற்ற மோதல்கள் குறித்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 18 மாதங்களாக பகையுணர்வை தூண்டி அசிங்கமான விதத்தில் வன்முறைகளல் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகள் தவறியமை குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
எப்போதும் இல்லாத வகையில், இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் ஜனநாயகத்தின் மூலம் சரிசமமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை வழங்குவதற்கு மாபெரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனவாத கலவரத்தை அடக்க அன்றிருந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், பெரும் எண்ணிகையிலான உயிர்களை காவு கொண்ட 25 வருடகால தொடர் யுத்தத்தை நோக்கி நாடு தள்ளப்பட்டது.
பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்கடிக்க நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கங்கள், முப்படை, பொலிஸ் உட்பட பொது மக்களுக்கு தலைமை தாங்கியது. அந்த யுத்தத்தை முடிவு நோக்கி கொண்டு சென்று இன்றைய அரசாங்கம் மிக முக்கிய பணியை நிறைவேற்றியது.
இந்த நிலையில், இன மற்றும் மத பேதங்களை ஏற்படுத்தும் மோதல்களை நிறுத்த உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைவர்கள், நிறுவனங்கள், தனிநபர்கள் என அனைவரும் இன்றைய அரசாங்கத்தின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
மோதலில் ஈடுபட மக்களை தூண்டியவர்கள், அந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் தாமதமின்றி சட்டத்திற்கு முன்கொண்டு வரப்பட்டு, சட்டத்தை அமுல்படுத்தி, அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும்.
ஒரு சிறிய தரப்பினரான அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக இலங்கையை மற்றுமொரு சிவில் யுத்த்தை நோக்கி இட்டுச் செல்ல முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafv2.html
Geen opmerkingen:
Een reactie posten