தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

ஞானசார தேரரை கைது செய்ய கோரி பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரனை
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 09:52.20 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 5ஆம் மாதம் முதல் 8ஆம் திகதி வரை இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.  ஜூலை மாதம் 5ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இவ்விடயம் குறித்து இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafu4.html
மத விவகாரங்கள் குறித்து விசாரணை
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 10:07.49 AM GMT ]
மத விவகாரங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 52 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மத விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்த சாசன அமைச்சின் கீழ் இயங்கும் இப் பொலிஸ் பிரிவுக்கு 308 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சகல முறைப்பாடுகள் தொடர்பிலும் அந்த அந்த பொலிஸ் பிரிவுகளில் விசாரணைகள் இடம்பெறும் என மத விவகாரங்களுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவின் பொறுப்பான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அறிவித்தலின்றி மற்றும் பொறுப்பின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்புபட்டவர்களை அறிவுறுத்தல் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafu5.html
ஞானசார தேரரை கைது செய்ய கோரி பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 10:45.47 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பை இலங்கையில் தடைசெய்து, இனவாதத்தை தூண்டி வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி பிரான்ஸில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்று பிரான்ஸில் குடியேறியுள்ள முஸ்லிம் சமூகம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பாரிஸில் நடைபெற்றது.
முஸ்லிம்களுடன் தமிழர்களும், சிங்களவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் ஈபிள் டவருக்கு அருகில் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அளுத்கமவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafvz.html

Geen opmerkingen:

Een reactie posten