தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

முஸ்லிம் வன்முறைகளின் எதிராலி! இலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்!

ஜனாதிபதியின் இணையத்தளம் சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டது!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 02:10.03 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் உள்ளிட்ட   அரச தரப்பினரின்  பல அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்தே, ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளம் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டது என்பதை, அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றிரவு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் தற்போது அது செயற்படத் தொடங்கியுள்ளதாகவும், திங்கட்கிழமை தொடக்கம், பதிவேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களின் மூலம்,ஜனாதிபதி, திறைசேரி, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள் முடக்கப்பட்டதாகவும், சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதியின்  இணையத்தளம் தற்போது இயங்கி வருவதாக, அதிபரின் ஊடகப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார்.
திறைசேரி இணையத்தளமும் இயங்கத் தொடங்கியுள்ளது.
ஒப்பரேசன் சிறிலங்கா என்ற பெயருடையவர்களே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRWLagw7.html

முஸ்லிம் வன்முறைகளின் எதிராலி! இலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 12:46.18 AM GMT ]
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானித்துள்ளன.
 அத்துடன்,  இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் புறக்கணிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
கடந்த 15ம் திகதியன்று இலங்கை அளுத்கம பகுதி முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மண்டலங்கள், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
அந்தத் தொடரிலேயே குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் இந்த முடிவை அறிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRWLagw4.html

Geen opmerkingen:

Een reactie posten