[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 12:18.00 AM GMT ]
தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு வடக்கின் இராணுவ முகாம்களை விஸ்தரிக்க காணிகளை வழங்குவதற்கு காணி அமைச்சு இணங்கியுள்ளது.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இந்த நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
முகாம்களை அமைப்பதற்காக அரசாங்கம் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மக்களை ஆத்திரமூட்டி, இல்லாத அதிகாரங்கள் இருப்பதனைப் போன்று வட மாகாண சபையின் சில அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் அரசியல் லாபமீட்டுவதே இந்த அரசியல்வாதிகளின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் கிடையாது என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமோ அல்லது மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமோ காணிகளை சுவீகரிப்பதற்கோ அல்லது காணிகளை வழங்கவோ மாகாண சபைகளுக்கு அதிகாரம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும்!- அமைச்சர் வாசுதேவ கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 12:25.10 AM GMT ]
முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் இனரீதியான முரண்பாட்டை உண்டு பண்ணியமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்படவேண்டும் என்று அமைச்சர் கோரியுள்ளார்.
ஜிகாத் அமைப்பினர் இலங்கையில் தங்கியிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் அவரை சார்ந்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்.
அளுத்கம சம்பவங்கள் அரசாங்கத்துக்கு அவப்பேற்றை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டவையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அளுத்கமவில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் உள்ளவர்கள் அல்ல.
அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஜிகாத் அமைப்பினர் இல்லை!- பாதுகாப்பு அமைச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 12:37.22 AM GMT ]
இலங்கையின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இலங்கையில் ஜிகாத் அமைப்பினர் செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.
வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டி அசாத் சாலியை கைதுசெய்ய முடியுமானால் ஏன் அதே தவறை செய்த கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முடியாது என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
எனினும் இதனை மறுத்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய, இதற்கான எவ்வித சாட்சியங்களையும் படையினர் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் படையினர் பாதுகாப்பு விடயத்தில் அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இலங்கையை பொறுத்தவரை, தமிழ் புலம்பெயர்வாளர்கள் என்ற பொது எதிரி மட்டுமே சர்வதேச மட்டத்தில் செயற்படுவதாக ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.
அசாத் சாலியை கைது செய்த பொலிஸ் ஏன் ஞானசாரரை கைது செய்யவில்லை?! பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும்!- ஆங்கில செய்தித்தாள்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 01:48.56 AM GMT ]
இலங்கையில் இன்று நாட்டின் இறைமையை குறிவைத்து வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று இலங்கையின் பொலிஸ் மா அதிபர் என் கே இலங்கக்கோன் பதவி விலக வேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தில் கோரியுள்ளது.
அளுத்கமையில் பொதுபலசேனா பேரணி நடத்திய பின்னரே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன.
முன்னதாக பௌத்த பிக்கு ஒருவர் முஸ்லிம் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தே இந்தப்பேரணி நடத்தப்பட்டது.
எனினும் பௌத்த பிக்கு தாக்கப்படவில்லை என்று வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தின.
இருந்தபோதும் முந்திக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்திருந்த இலங்கையின் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன், குறித்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இது பொறுப்பற்ற தமது பதவிக்கு அப்பாற்பட்ட குற்றமாகும்.
எனவே இலங்கக்கோன் பதவியை விட்டு விலகவேண்டும்.
இதேவேளை அளுத்கமவில் பொதுபலசேனா பேரணி நடத்திய போது அதற்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கினர்.
இதற்கு காரணத்தை கேட்டபோது அமைதியான பேரணி ஒன்றுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், குறித்த பேரணி, முஸ்லிம்களுக்கு எதிரான சுலோகங்களை தாங்கிய பேரணியாக இருந்தது.
எனவே அதனை அமைதிப் பேரணி என்று எவ்வாறு கூறமுடியும் என்று ஆங்கில செய்தித்தாள் கேள்வி எழுப்பியுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் அசாத் சாலியை கைதுசெய்ய முடியுமானால் ஏன் அதே தவறை செய்த கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய முடியாது என்றும் செய்திதாள் கேட்டுள்ளது.
அதேவேளை அளுத்கம வன்முறைச் சம்பவங்களில் யாரும் கொல்லப்படவில்லை என உண்மைக்கு புறம்பான தகவல்களை அவ்வப்போது பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான நோலிமிட் தீக்கிரையாக்கப்பட்ட போது இலங்கக்கோன் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
எனவே பொறுப்பற்ற செயல்களுக்காக இலங்கக்கோன் பதவி விலக வேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் தமது கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten