தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

பாப்பரசரின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விஜயம்!


செய்தி தணிக்கையால், தகவல் வெளியாவதை தடுக்க முடியாது: எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 02:12.32 AM GMT ]
இலங்கையில் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் தணிக்கை கடைப்பிடிக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற சில ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரான ஊடாகமான சண்டேலீடரின், செய்தியாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பங்களையும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களின் போது அதிகாரிகளால் செய்தித்தணிக்கை செயற்படுத்தப்படுவதாக, எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கத்தின் ஆசிய பசுபிக் பொறுப்பாளர் பெஞ்சமின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
எனினும் தடை என்பது தகவல்கள் வெளிவருவதை ஒருபோதும் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
பாப்பரசரின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 02:05.42 AM GMT ]
பாப்பரசர் முதலாம் பிரான்ஸிசின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
எதிர்வரும் வாரத்தில் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளனர்.
பாப்பரசரின் 15 மெய்ப்பாதுகாவலர்கள் இலங்கை விஜயம் செய்ய உள்ளனர்.
பாப்பரசர் விஜயம் செய்ய உள்ள இடங்கள் மற்றும் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் அவதானிக்கும் நோக்கில் மெய்ப்பாதுகாவலர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது முதலாவதாக நீர்கொழும்புக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten