தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

மோடி அரசின் ஷாப்பிங் லிஸ்ட்டில் முதலிடம், சி.ஐ.ஏ. உபயோகிக்கும் விமானங்கள் !


புதிய இந்திய அரசுடன் நெருக்கமான நட்புறவுடன் இருக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதை ராணுவ ரீதியாக சரியான முறையில் உபயோகித்துக்கொள்ள புதுடில்லி திட்டங்களை வகுப்பதாக கூறப்படுகிறது.
‘அமெரிக்காவிடம் இருந்து தேவை’ என மோடி அரசு கொடுக்கவுள்ள ஷாப்பிங் லிஸ்ட்டில், ராணுவம் தொடர்பான பொருட்களே அதிகம் இடம்பெறும் என டில்லி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. அந்தப் பட்டியலில் UAV (Unmanned Aerial Vehicles) எனப்படும் ஆளில்லாத உளவு விமானங்கள், மற்றும் UCAV (Unmanned Combat Aerial Vehicles) ஆளில்லாத தாக்குதல் விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாம்.
நாம் முதலில் குறிப்பிட்ட விமானங்களின் பிரதான பணி உளவு பார்த்தல். இரண்டாவதாக குறிப்பிட்ட ரக விமானங்கள்தான் முக்கியமானவை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் சில நாடுகளின் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வால் இயக்கப்பட்டு, தீவிரவாதிகள் மீது வானில் இருந்து ஏவுகணை வீசும் விமானங்கள் இவைதான். இந்த ரக விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையிடம் இல்லை. ஆனால், பாகிஸ்தான் விமானப்படை அவற்றை இயக்குகிறது. சில வாரங்களுக்கு முன் தலிபான்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை இந்த ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலமே ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது.
பாகிஸ்தானுக்கு அந்த விமானங்களை கொடுத்தது, அமெரிக்காதான். இந்த ரக விமானங்களை இயக்கி வானில் இருந்து இலக்குகள் மீது துல்லியமாக ஏவுகணை ஏவுவதற்கு, கடுமையான பயிற்சிகளும், அனுபவமும் அவசியம். அமெரிக்கர்கள் பல ஆண்டு காலமாக இயக்குவதால் அனுபவசாலிகளாக உள்ளார்கள். ஆனால், சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் விமானப்படை ஆளில்லாத தாக்குதல் விமானங்களை உபயோகித்து நடத்திய தாக்குதலின்போது, ஏவப்பட்ட ஏவுகணைகள் தலிபான்களின் இலக்குகளை சரியாக தாக்கவில்லை. இதனால், அதன்பின் தலிபான்கள் மீது விமான தாக்குதல் நடத்தியபோது, விமானிகளால் இயக்கப்படும் போர் விமானங்களே அனுப்பி வைக்கப்பட்டன.
இந்திய விமானப்படையை பொறுத்தவரை, இந்த விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொண்டால், உடனடி தாக்குதல்களுக்கான இலக்குகள் ஏதுமில்லை என்பதால், பயிற்சி பெற போதிய அவகாசம் கிடைக்கும்.
http://www.athirvu.com/newsdetail/263.html

Geen opmerkingen:

Een reactie posten