தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

சிங்கள பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர் - மங்கள சமரவீர!!

இலங்கையுடன் பேசி முடிவு காணுங்கள்: மோடியிடம் கருணாநிதி வேண்டுகோள்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 03:58.18 AM GMT ]
இலங்கை சிறைகளில் இருக்கும் 64 தமிழக மீனவர்களை விடுவித்து, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விரட்டி அடிப்பதும், இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைப்பதும், காவலை நீடிப்பதும், மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் நாசமாக்குவதும் தொடர் கதையாக நீண்டு கொண்டே போகிறது.
மத்தியில் ஆட்சி மாறியபோது, நமது பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்தித்த பிறகு இந்த பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த 23ந் திகதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்களில் பத்து படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியிலே மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான மூன்று படகுகளில் இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள்.
7 விசைப்படகு மீனவர்கள் தப்பித்த போதிலும், 3 படகுகளில் இருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்று விட்டார்கள். ஜெகதாபட்டினம் பகுதியில் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் தவிர கடந்த 18ந் திகதி நாகை மீனவர்கள் 7 பேர் சிறை பிடிக்கப்பட்டு இலங்கையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு முன்பே தமிழக மீனவர்கள் 46 பேர் இன்னமும் இலங்கை சிறையிலே உள்ளார்கள்.
இலங்கை சிறைகளில் வாடும் இந்த 64 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட மத்திய அரசு, குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, இந்த கொடுமை தொடர்ந்து நீடிக்கப்படாமல் தடுக்கப்பட நிரந்தரமான ஒரு தீர்வுகாணவும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுடன் பேசி முடிவுகாண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaes2.html

சுவிஸ் அமரர் செல்வநிதி பரஞ்சோதி நினைவாக கிளிநொச்சி பாடசாலைகளுக்கு உதவி
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 04:59.42 AM GMT ]
சுவிஸ் அமரர் செல்வநிதி பரஞ்சோதி நினைவாக கிளிநொச்சி பாடசாலைகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது
சுவிஸ் அமரர் செல்வநிதி பரஞ்சோதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தாரால் பா.உறுப்பினர் சி.சிறீதரனூடாக கிளிநொச்சி அல்லிப்பளை இந்து தமிழ் கலவன் பள்ளி மாணவர்களுக்கு புத்தகபைகள், கற்றல் உபகரணங்களும் கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலத்திற்கு மின் இணைப்பை ஏற்படுத்துவதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் பெரிதும் பயன்பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு மின் இணைப்பை ஏற்படுத்தியதன் மூலம் தமது மாணவர்கள் மல்ரி மீடியா செயற்பாடுகள் மூலம் சிறந்த அறிவை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பாடசாலையின் அதிபர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.
இந்த உதவி வழங்கும் நிகழ்வுகளில் அல்லிப்பளை மற்றும் புதுமுறிப்பு பாடசாலைகளின் அதிபர்கள் கரைச்சி பிரதேசசபை தலைவர் நாவை.குகராசா பளை பிரதேச த.தே.கூட்டமைப்பின் கட்சி அமைப்பாளர் சாந்தன் உட்பட பள்ளி சமுகத்தினர் கலந்துகொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaes4.html

எப்போது பொகவந்தலாவ கிலானி தோட்ட வீதி புனரமைக்கப்படும்?
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 05:20.23 AM GMT ]
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலாவ கிலானி தோட்டத்திற்கு செல்லும் வீதியானது நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், வாகனசாரதிகள், குற்றம் சுமத்துகின்றனர்
மழைகாலங்களில் குறித்த வீதியின் ஊடாக தமது போக்குவரத்தினை மேற்கொள்ள பெரும் சிரமப்படுவதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
 தற்பொழுது மலையகத்தில சீரற்ற காலநிலை நிலவுவதால் குறித்த வீதி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றமை குறிப்பிடதக்கது.
இதேவேளை மழைகாலங்களில் குறித்த வீதியில் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு வெள்ள நீர் காணப்படுவதால் போக்குவரத்தினை முறையாக மேற்கொள்ள முடியாது என்று வாகனசாரதிகள் தெரிவிக்கின்றனர்.
கிலானி தோட்டத்திற்கு செல்லும் வீதியில் வெள்ள நீர் நிரம்பி காணபடுகின்ற போது அப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் டியன்சின் நகர் ஊடாக பொகவந்தலாவ நகரத்திற்கு வரக்கூடிய நிலமையே காணப்படுகின்றது.
இதன் போது வெள்ள நீர் நிரம்பி காணப்படுகின்ற போது குறித்த பிரதேச பாடசாலை மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிலானி தோட்ட வீதியை புனரமைத்து தருவதாக கூறி மத்திய மாகாண சபை தேர்தலின் போது மலையக மக்கள் முண்ணனியின் அரசியல் துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்னன் தலைமையில் அடிகல் நாட்டப்பட்டு பெக்கோ இயந்திரங்களை கொண்டு குறித்த வீதியை அகலப்படுத்திய போதும் கிலானித்தோட்ட வீதி புனரமைக்கபடவில்லை.
அதனை தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 50இலட்சம் ருபா செலவில் புனரமைக்க போவதாக குறித்த கிலானி தோட்டவீதிக்கு அடிகல் நாட்டபட்டது.
கிலானி தோட்ட வீதியில் காணபடுகின்ற பாலம் மிகவும் மோசமாக பழுதடைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.
எனவே குறித்த வீதி எப்போது புனரமைக்கபட்டு எப்போது கிலானி தோட்டமக்களிடம் கையளிக்கபடுமென்ற கேள்வியும் எழும்பியுள்ளது. எனவே வெகுவிரைவில் கிலானி தோட்ட வீதியை புனரமைத்து கொடுப்பது சம்பந்தபட்டவர்களின் கடமையல்லவா.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaes5.html
சிங்கள பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர் - மங்கள சமரவீர
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 06:11.45 AM GMT ]
சிங்கள பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளர்.
இலங்கையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இடையிலான உறவை சீர்குலைத்து, நாட்டுக்கு உதவி வரும் மத்திய கிழக்கு நாடுகளுடனான தொடர்புகளை அழிக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பின்னால், பாதுகாப்பு அமைச்சும் அதன் முக்கியஸ்தர் ஒருவரும் இருப்பதாக தான் பொறுப்புடன் கூறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாடு முழுவதும் சிங்கள மற்றும் முஸ்லிம் மோதல்களை ஏற்படுத்தும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தான் ஏற்கனவே விபரங்களுடன் தகவல்களை வெளியிட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சதித்திட்டங்கள் அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் மங்கள குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களின் போது பொதுபல சேனா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் தாக்குதல் நடத்தியமை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மோதல்களில் இரு தரப்பையும் சேர்ந்த அடிப்படைவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் உண்மையில், புத்தங் சரணம் என்பதற்கு பதிலாக அப சரணம் என்று பகிரங்கமாக கூறிய காவி அணிந்த நபரின் குழுவே இந்த தாக்குதல்களில் சம்பந்தப்பட்டுள்ளது.
புத்த துறவி ஒருவர் செய்யக் கூடாத காரியங்களில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் வைராக்கியம், குரோதம் மற்றும் ஆத்திரத்தை செயற்பட்ட குறித்த பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகளை அனுமதித்து விட்டு அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.
வெளியிடங்களில் இருந்து பஸ்களில் வன்முறையாளர்களை அழைத்து வந்து, முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் வீடுகளை உடைத்து, இளைஞர்களை சுட்டுக்கொன்று, முஸ்லிம்களின் நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை கொள்ளையிடும் போது பாதுகாப்பு தரப்பினர் எங்கிருந்தனர் எனவும் மங்கள கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaes7.html

Geen opmerkingen:

Een reactie posten