[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 05:21.44 AM GMT ]
அது குறித்து வடக்கு மாகாண சபையின் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. இரணைமடுக் குடிதண்ணீர்த் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை என்பவற்றை அடுத்தே நிதியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.
இந்தத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 7 ஆயிரத்து 630 மில்லியன் ரூபாவும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் 2 ஆயிரத்து 180 மில்லியன் ரூபாவும், இலங்கை அரசு 2 ஆயிரத்து 838 மில்லியன் ரூபாவும் நிதி வழங்கியிருந்தன. அவற்றுக்கு மேலாக பிரான்ஸைச் சேர்ந்த ஏ.எவ்.டி நிறுவனம் 5 ஆயிரத்து 232 மில்லியன் ரூபா வழங்கியிருந்தது.
குறித்த திட்டத்தை தற்போது உள்ளவாறே நடைமுறைப் படுத்துவதற்கு வடக்கு மாகாண சபை எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. கிளிநொச்சி மாவட்ட விவாசாயிகள் அதனால் பாதிப்படைவார்கள் என்பதால், வடக்கு மாகாண சபை நிபுணர் குழுவின் ஆலோசனைகளின்படி அந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இரணைமடுக் குடிதண்ணீர் விநியோகத் திட்டத்தை மூன்றாகச் செயற்படுத்துவதற்கு வடக்கு மாகாணசபையினால் நிதி வழங்குனர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண சபையினால் புதிதாகப் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்துக்கான அனுமதி இன்ன மும் வழங்கப்படவில்லை. கொழும்பிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, வடக்கு மாகாணசபையின் பரிந்துரையை மணிலாவிலுள்ள அதன் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இருப்பினும் அதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை. இந்தநிலையில். இரணை மடுக் குடிதண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி வழங்கும் நிறுவனத்தில் ஒன்றான பிரான்ஸைச் சேர்ந்த ஏ.எவ்.டி நிறுவனம், தனது நிதிப் பங்களிப்பை திரும்பப் பெறத்தீர் மானித்துள்ளது.
அதுகுறித்து வடக்கு மாகாண சபையின் நீர்ப்பாசனத் திணைக்களத் துக்கும் அறிவித்துள்ளது. ஆயினும் குறித்த நிறுவனம் நிதியை மீளப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும், திட்டத்தை மாற்றியமைத்து நடைமுறைப் படுத்துவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahu3.html
அரசாங்கம் சிங்கள வாக்கு வங்கியை இழந்து வருவதால் இனவாதத்தை தூண்டுகிறது - ஜே.வி.பி
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 06:04.16 AM GMT ]
அண்மையில் ஏற்பட்ட குழப்பமான நிலமையை உள்வாரியாக ஆராயும் போது அதில் மத வாதமோ இனவாதமோ இருப்பதை காணமுடியவில்லை. ஆனால் அதற்குள் அரசியல் தேவைகள் இருப்பதை காணமுடிகிறது.
ஆட்சியாளர்களின் ஆட்சி அதிகாரம் கையை விட்டு செல்ல போகும் நிலையில், அவர்கள் மத மற்றும் இனவாதத்தை தூண்டும் கீழ்த்தரமான தந்திரோபாயங்களை கையில் எடுக்க ஆட்சியாளர்கள் முயற்சிப்பார்கள்.
ராஜபக்ஷ அரசாங்கம் சிங்கள வாக்கு வங்கியை இழக்கும் நிலைமையை எதிர்நோக்கி வருகிறது.
ஆட்சியாளர்களின் குறைப்பாடுகளை காணும் போது மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.
மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை, நிவாரணங்களை இரத்துச் செய்தல், ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்தின் மீது இருக்கும் மக்களின் நம்பிக்கை இல்லாமல் போகும்.
அப்படியான நேரத்தில் மீண்டும் மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் அதிகாரத்தை தற்காத்து கொள்ளவும் அடிப்படைவாத சக்திகளை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பகையுணர்வுகளை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவார்கள்.
இதற்காக சம்பந்தப்பட்ட அடிப்படைவாதிகளுக்கு அரசாங்கத்தின் உதவியும் கிடைக்கும்.
இலங்கை போன்ற நாட்டின் எதிர்காலத்திற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியம் முக்கியமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான குழப்பமான நிலைமைகளை உருவாக்கி மக்களை தூண்டுவது மிகவும் ஆபத்தானதும் பாரதூரமானதுமான நிலைமையாகும் என வித்தியாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmsyGRULahu6.html
மூளை வளர்ச்சி குறைந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர் கைது
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 05:47.12 AM GMT ]
சந்தேக நபர் இன்று அதிகாலை 1.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நல்துர பிரதேசத்தில் உள்ள இராணுவ பொறியியல் படைப் பிரிவின் முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
முந்தல் பொலிஸ் பிரிவின் நவதன்குளம் - விசேனைக்கட்டு பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 அளவில் சந்தேக நபர் மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தல் - நவதன்குளம் பிரதேசத்தில் வசித்து வரும் போரில் அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக சந்தேக நபர் பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக முந்தல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahu5.html
Geen opmerkingen:
Een reactie posten