தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

வாக்குகளைக் குவிப்பதற்காகவே தாக்குதல்: அமெரிக்க அதிகாரியிடம் கூட்டமைப்பு



நாட்டில் குழப்பங்களை விளைவிக்க கடும்போக்குவாதிகள் முயற்சி
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 03:47.16 AM GMT ]
நாட்டில் குழப்பங்களை விளைவிக்க சில கடும்போக்குவாத சக்திகள் முயற்சித்து வருவதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம, பேருவளை சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு நாட்டில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இடமளிக்கக் கூடாது. பள்ளிவாசலுக்கு செல்லும் முஸ்லிம் மக்களை குழப்பும் வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் மக்கள் அமைதியான முறையில் மதவழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.
சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.
கடும்போக்குவாதிகள் மக்களை பிழையாக வழிநடத்தி வன்முறைகளைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான முயற்சிகளுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என சகல இன சமூகங்களிடமும் கேட்டுக் கொள்வதாக கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahu0.html
முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழப்பர்- ஹக்கீம்
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 04:44.48 AM GMT ]
கலகொட அத்தே ஞானசார தேருக்கு எதிராக உடனடியான நடவடிக்கையை எடுக்காதுபோனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமரிக்க தூதுவர் மிச்செய்ல் சிசன் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தபோதே ஹக்கீம் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.எனினும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை
இந்தநிலையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அமரிக்காவும் ஐக்கிய நாடுகளின் செயலாளரும் கண்டனம் வெளியிட்டடமைக்கு ஹக்கீம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பித்ததில் பிழை எதுவும் இல்லை என்றும் ஹக்கீம் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahu1.html
வாக்குகளைக் குவிப்பதற்காகவே தாக்குதல்: அமெரிக்க அதிகாரியிடம் கூட்டமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 05:06.05 AM GMT ]
தேர்தல் வாக்குகளைப் பெறுவதற்காகவே முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த அரசு ஏவி விட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலரிடம் தெரிவித்துள்ளது.
போர் வெற்றியைக் காட்டி இனி மேலும் சிங்கள மக்களின் வாக்குகளை அரசு பெற்றுக் கொள்ள முடியாது. அதனாலேயே தொடர்ந்தும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் ஏவிவிடப்பட்டுள்ளன .
சிங்கள மக்களின் வாக்குகளுக்காகவே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இன்னமும் அரசு நாட்டமில்லாது இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு இரு நாள் பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலர் அதுல் கேசாப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் வரையில் நீடித்த இந்தக் கலந் துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் குறித்துக் கூறும் போதே நாடாளுமன்ற உறுப் பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேம சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"தமிழர்கள் பெரும்பான்மை யாக வாழுகின்ற வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்னமும் போர் பாதிப்பிலிருந்து மீளவில்லை. அங்கே இராணுவப் பிரசன்னம் என்பது அதிகரித்ததாய் உள்ளதுடன், சிவில் நிர்வாகத்துக்குப் பதில் அங்கு இராணுவ நிர்வாகமே இடம்பெறுகின்றது.
எந்தவொரு விடயத்திலும் இராணுவத்திர் மூக்கை நுழைக்கின்றனர். தமிழ் அரசியல் கட்சிகள் மக்களுடன் இணைந்து பணியாற்ற முடியாத வகையில் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது இதுவரையில் ஆலோசிக்கப்படவில்லை.
இலங்கை அரசு, தமிழ் மக்களிற்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதற்கு நாட்டமற்றதாகவே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டதை வைத்து சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று தமது இருப்பை தற்போதைய அரசு தக்க வைத்திருந்தது. அந்தப் போர் வெற்றி மாயை மெல்ல விலகுவதால், சிங்கள மக்களின் வாக்குகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்காக, முஸ்லிம் மக்கள் மீதான கலவரத்தை தூண்டி விடுகின்றது.
இத்தகைய கலவரங்கள் இடம் பெறுவதை தடுக்காமல் விடுவ தும் அந்தக் கலவரங்களைத் தூண்டுவதற்கு காரணமாகின்றது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கினால், தனது சிங்கள வாக்கு வங்கி சரிந்து விடும் என்று இலங்கை அரசு கருதுகின்றது. அதனா லேயே தமிழ் மக்களிற்கான எந்தவொரு தீர்வையும் முன் வைப்பதற்கு அரசு தயாராக இல்லை.
தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் பேச்சு ஊடாகவும் தீர்வு எட்டப் படுவதற்கு இலங்கை அரசு முழுமையாக ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே. இலங்கைக்கு எதிரான சர்வ தேச விசாரணையில் சாட்சி யமளிப்பதற்கு, இலங்கையில் பலர் தயாராகவுள்ள போதும், அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு பகிரங்கமாகவே ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் யஹகலிய ரம்புக்வெல, சாட் சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். இந்த விடயங்களை, இலங் கைக்கு எதிரான பிரேரணை யைக் கொண்டு வந்த நாடு என்ற அடிப்படையில் மிக முக்கியமானதாக கருத வேண்டும். என்பன போன்ற விடயங்களைச் சந்திப்பின்போது குறிப்பிட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இவை குறித்து அதுல் கேசாப் அளித்த பதில் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் வினவியபோது, எமது கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் பதிலளித்த அவர், இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் முயற்சிக்கும் என்பதைக் குறிப்பிட்டார். அத்துடன் இதே மனநிலையிலுள்ள ஏனைய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா உரிய அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன் ஐ.நா விசாரணைக்கு சாட்சியமளிப்பவர்க ளுக்கான பாதுகாப்புத் தொடர்பில் ஐ.நாவுடன் அமெரிக்கா கலந்துரையாடல் நடத்தும் என்றும் அவர் அப்போது குறிப் பிட்டார் என்று பதிலளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahu2.html

Geen opmerkingen:

Een reactie posten