தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

போதையில் சட்டத்தை மீறிய இரண்டு பிக்குகள் விளக்கமறியலில்..

அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலமே தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் - நீதியமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 06:12.35 AM GMT ]
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலம் மட்டுமே நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கொரிய தூதுவர் செங்க் வோங் சேம் மற்றும் அமைச்சர் ஹக்கீம் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு கிடைக்குமே அன்றி சர்வதேசத்தில் தீர்வுகள் கிடைக்காது.
பெருபான்மை இனத்தின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
இலங்கையில் உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இந்த ஜனநாயக நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் தமது அபிலாஷைகள் மற்றும் நிலைப்பாடுகளை முன்வை முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் பல அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளில் இனப்பிரச்சினைகள் இருப்பதை காணமுடிகிறது.
இலங்கையின் இனப்பிரச்சினையை எடுத்து கொண்டால், தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி கொள்ள வன்முறையை கையாண்ட அமைப்புகள் இருந்தன.
இனங்களுக்கு இடையில் இனப்பிரச்சினையை கட்டவிழ்த்து விடுவது தற்போது அதிகரித்து வருகிறது எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahu7.html
இலங்கையில் புத்தமத பிக்குகள் சமூக விரோதிகளை ஏவி முஸ்லீம்களை கொல்கின்றனர்: தா. பாண்டியன்
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 06:42.50 AM GMT ]
இலங்கையில் புத்தமத பிக்குகள் சமூக விரோதிகளை ஏவி இஸ்லாமிய மக்களை கொன்றழிக்கத் தொடங்கியுள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த அலுத்தகமா என்னும் இடத்தில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் மக்களின் மீது மிகவும் கடுமயான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர்கள் சிங்கள இனவெறி அரசியலை அடிப்படையாக கொண்ட ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது. இதில் ராஜபக்ச அரசுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். இலங்கையில் புத்தமத பிக்குகள் சமூக விரோதிகளை ஏவி இஸ்லாமிய மக்களை கொன்றழிக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மையினரோடு சின்ன சிறுபிரச்சனைகளை உருவாக்கி, அதில் சிங்கள காடையர்களை கொண்டு, தாக்குத்தல் தொடுக்கும் வழக்கத்தை இலங்கை கொண்டுள்ளது. 1956, 1983 ஆண்டுகளில் இலங்கையில் பொது மக்களின் மீது நடந்த தாக்குதலை இதற்கு உதாரணமகக் கூற முடியும்.
இலங்கை அரசு எந்தப் பிரச்சனையையும் அறிவு பூர்வமாக அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு பதிலாக இன அழிப்பின் மூலம் தீர்த்துக்கட்ட முயற்சிப்பது தெளிவாகி வருகிறது. முள்ளிவாய்கால் படுகொலை பற்றி ஐக்கிய நாடுகள் விசாரணை தொடங்குவதாக அறிவித்துள்ள இன்றைய சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த வன்செயலை இந்தியக் கமயூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கை வாழ் மக்களின் மனித உரிமைகளை சாதி, மத வேறுபாடு இல்லாமல் குடிமக்களாக கருதி, குடியாட்சி நடத்த வைக்க, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பில் வற்புறுத்துகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahv0.html
போதையில் சட்டத்தை மீறிய இரண்டு பிக்குகள் விளக்கமறியலில்..
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 06:32.07 AM GMT ]
அளுத்கம பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது அதிகமான மதுபோதையில் சட்டத்தை மீறிய இரண்டு பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை பொருட்படுத்தாது இவர்கள் மதுபோதையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணம் செய்த போதே கைது செய்யப்பட்டனர்.
இவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியும் மதுபோதையில் இருந்ததுடன் அவரும் கைது செய்யப்பட்டார்.
கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahvy.html

Geen opmerkingen:

Een reactie posten