தமிழ் நாட்டில் எதிர்ப்புகள் எழும் என்ற காரணத்தாலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாடுகள் வலுப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டால், தேவையற்ற விமர்சனங்களும், ஆர்ப்பாட்டங்களும் எழும்.
இதனைக் கருத்தில் கொண்டே அவர் இலங்கைக்கான விஜயம் குறித்த திட்டங்களை பிற்போட்டுள்ளதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZev7.html
Geen opmerkingen:
Een reactie posten