இந்திய மீனவர்கள் 29 பேருக்கு விளக்கமறியல்! - கச்சதீவை மீளப்பெறுமாறு மோடியை வலியுறுத்துவார் ஜெயலலிதா!
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 10:11.34 AM GMT ]
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 33 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் நேற்றுக் கைது செய்துசெய்தனர்.
இவர்களில் 29 பேரைக் கடற்படையினர் நேற்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.
இவர்கள் 29 பேரையும் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் முற்படுத்தியபோது அனைவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கச்சதீவை மீளப்பெறுமாறு மோடியை வலியுறுத்துவார் ஜெயலலிதா!
நாளை செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரு நடவடிக்கையாக கச்சதீவை இந்தியா மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருவார் எனத் தெரியவருகின்றது.
தமிழக முதல்வர் - இந்தியப் பிரதமர் சந்திப்பில் பிரதான அம்சமாக இலங்கைத் தமிழர் விவகாரமே பேசப்படும் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
கச்சதீவை இந்திய அரசு மீளப்பெற்றுத் தனது உரிமையை நிலைநிறுத்துமானால் அங்கிருந்தபடியே இந்திய மீனவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை இந்தியத் தரப்பு உறுதிப்படுத்த முடியும் என்பதையும் - கச்சதீவை இந்தியா, இலங்கைக்குத் தாரைவார்த்தமை இந்தியச் சட்டங்களுக்கு முரணானது என்பதால் அதனை மீட்டு தனது உரிமையை இந்தியா நிலைநாட்டுவது நியாயமானது என்பதையும் - தமிழக முதல்வர், இந்தியப் பிரதமருக்கு நாளை நேரில் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்டுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgu7.html
பொய் குற்றச்சாட்டால் அரசின் பயணத்தை நிறுத்த முடியாது: ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 09:44.42 AM GMT ]
கொழும்பு லும்பினி கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால், சென்று அவற்றுக்கு பதிலளித்து காலத்தை கடத்த தயாரில்லை.
நாட்டு பிள்ளைகளின் கல்விக்காக நிறைவேற்ற வேண்டிய பணிகளை முறையாக நிறைவேற்றி, நாட்டுக்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்க தேவையானவற்றை தொடர்ந்தும் தேடிப் பார்த்து மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgu5.html
Geen opmerkingen:
Een reactie posten