தோழில் கைபோட்டால் உதைப்பேன்: சிங்கள பொலிசார் மீது சுரேஷ் பாச்சல்(வீடியோ)
05 June, 2014 by admin
இன்றைய தினம் முல்லைத்தீவில் காணமல் போனவர்கள் தொடர்பாக ஆர்பாட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் வந்திருந்தார். அவரை சிலர் தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்கள். இவர்கள் இலங்கை இராணுவத்தின் அடியாட்கள் என்று, சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களைப் பார்த்து, கடித்துகொண்டார். இதேவேளை இப்பிரச்சனையை தீர்பதுபோல அங்கு வந்த பொலிசார் அவர் தோழ் மீது கை வைத்து பேசினார்கள். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் , பொலிசாரை திட்டி தீர்த்தார். என் மீது கைவைக்காதே. வைத்தால் உதைப்பேன் என்று கத்தியுள்ளார். இதோ வீடியோ இணைப்பு.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6933
|
லண்டனில் நாளை அகதிகளுக்கான விழிப்புணர்வுப் போராட்டம்: அனைவரும் வருக !
05 June, 2014 by admin
உலகம் முழுவதும் அலவல நிலைக்கு உள்ளாகியுள்ள அகதிகளுக்காக லண்டனில் நாளை வெள்ளியன்று போராட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான அகதிகள் காரியாலயம் முன்பாக நாளை(06) மாலை 4.00 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அகதிகளை நாடு கடத்துவது, அகதிகள் அந்தஸ்தை நிராகரிப்பது, இன்னலுக்கு உள்ளாகியுள்ள அகதிகளை காப்பாற்றவே இந்த விழிப்புணர்வு போராட்டம் நடைபெறவுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. எனவே மக்கள் இதில் கலந்துகொண்டு, ஆதரவை வழங்கவேண்டுமென ஏற்பாட்டாளார்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இப்போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் இங்கே இணைப்பட்டுள்ளது.

இப்போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் இங்கே இணைப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6932
Geen opmerkingen:
Een reactie posten