[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 03:35.45 PM GMT ]
இதன் ஆரம்ப கட்டமாக அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் அமைப்பின்படி, ஜனாதிபதி ஒருவரின் மரணத்துக்கு பின்னர் அல்லது ஜனாதிபதி பதவியில் நீடிக்க உடல் நிலை ஒத்துழைக்காத பட்சத்தில், நாட்டின் பிரதமர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.
இடைக்கால ஜனாதிபதி, ஒரு மாதத்தின் பின்னர் தமது பதவியை ராஜினாமா செய்வதுடன், அரசாங்க கட்சியில் இருந்து ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்.
இந்த நடைமுறையில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மரணத்துக்கு பின்னர் ஜனநாயக ரீதியாக இடம்பெற்றது. ஆனால் தற்போது நடைபெறுவது ராஜபக்ஷவின் ஆட்சி.
இங்கு ஜனநாயக வழிக்கு இடமில்லை. மகிந்த ராஜபக்ஷ தமது பதவி, தமது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கே செல்ல வேண்டும் என்பதையே விரும்புவார்.
எனினும் நாட்டின் பிரதமராக வேறொருவர் இருக்கும் பட்சத்தில், தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பது சந்தேகமானது.
இந்த நிலையில் தமது சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துவிட்டால், ஏதேனும் அசம்பாவிதம் இடம்பெறும் பட்சத்தில், கோத்தபாய இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.
பின்னர் மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் எவையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாத வகையில், தமது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவை சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeq3.html
அச்சுவேலி, திக்கம் முகாம்களை மூட முடியாது!- ருவான் வணிகசூரிய
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 03:45.01 PM GMT ]
தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பு மீண்டும் உயிர் பெறுவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சுவேலி இராணுவ முகாம் மிகவும் முக்கியமென கருதப்படுவதனால் எக்காரணம் கொண்டும் அந்த முகாம் அகற்றப்பட மாட்டாதென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-
குறித்த முகாம் 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது இந்த முகாமில் 09 குடும்பங்களுக்குரிய காணிகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்களுக்குரிய நஷ்ட ஈட்டுத்தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச சேவைகளுக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் சட்டம் 1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் பிரகாரமே வடக்கில் இராணுவ முகாம்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.
இவ்வாறான காணி சுவீகரிப்பு இல்லையென்றால் நாட்டில் இன்றைய அதிவேகப் பாதைகள் இருக்காது. அபிவிருத்தி பணிகள் நடைபெற்றிருக்க முடியாது.
மேலும் நுணாவிலிலுள்ள இராணுவ முகாமை இன்னும் 02 மாதங்களில் மூட நாம் தீர்மானித்துள்ளோம். அங்கிருந்த இராணுவத்தினருக்காக ஏனைய முகாம்களில் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டிடப்பணிகள் முடிந்த பின்னர் இம் முகாம் மூடப்படும்.
திக்கத்திலுள்ள இராணுவ முகாம் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதாகும். அதனையும் இராணுவம் தம் வசம் தொடர்ந்தும் வைத்திருக்கும். அப்பிரதேசத்தில் காணி உரிமை கோருவோருக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கும் என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeq4.html
Geen opmerkingen:
Een reactie posten