[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 02:41.25 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோகராஜன் எம்.பி.யும் புலிகளின் அடிவருடிகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்த அஸ்வர் எம்.பி.யும் புலிகளின் அடிவருடிகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்த அநியாயம் எங்கு இடம் பெறுகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுப்பதற்குத் தயங்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் கூடியது. அஸ்வர் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
நேற்றைய தினத்தில் இந்த சபையில் கேள்வி ஒன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மோடி மஹிந்தவுக்கு என்ன கூறினார். என்று கேட்டாரே தவிர மோடியை சந்தித்த ஜெயலலிதாவிடம் அவர் என்ன கூறினார் என்று கேள்வியைத் தொடுக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமரால் அழைக்கப்பட்டிருந்ததால் அவரும் பதவியேற்ற விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
எப்படி இருப்பினும் ஸ்ரீமா பிரகாரம் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமாகியுள்ளது. கச்சதீவு இலங்கையின் சொத்து அது எமது நாட்டின் முத்து ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் வந்தாலும் கச்சதீவை கொடுக்க மாட்டோம்.
மேலும் மீனவர்களின் பிரச்சினை குறித்து நான் குரல் கொடுத்து வருகின்றேன். இந்த பாராளுமன்றத்தில் மாத்திரம் அல்ல கைட்ஸில் அநீதி இடம்பெற்றாலும் அங்கு சென்றும் குரல் கொடுப்பேன்.
மஹிந்தவும் மோடியும் சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி. இந்த ஜோடி இந்திய மக்கள் மட்டுமல்லாது இலங்கை மக்களினதும் இறைமையைப் பாதுகாக்கும்.
இங்கு இந்த பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆறுமுகன் இருக்கின்றார். திகாம்பரம் எம்.பி. இருக்கின்றார். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோகராஜன் எம்.பி.யும் புலிகளின் அடியர்களாக இருக்கின்றனர். புலம்பெயர் சமூகத்தினருடன் இணைந்து நாட்டைப் பார்ப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeqz.html
ஈழத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டைப் பேணும் தமிழக முதல்வருக்கு நன்றிகள்!- ரவிகரன்
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 03:22.00 PM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தீவிலே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசியல் மற்றும் கலாச்சார இருப்பை தமிழர்கள் கொண்டு வந்திருக்கின்றனர்.
1500களில் ஏற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பின் போது தமிழர்கள் கொண்டிருந்த இறையாண்மை, இலங்கைத் தீவின் சுதந்திரத்தின் போது மீள வழங்கப்படவில்லை. மாறாக தமிழரின் இருப்பை இல்லாதொழிக்கும் நோக்கிலான இன அழிப்பு நடவடிக்கைகளே இங்கு வலுப்பெற்றன.
இறுதிப்போரின் இறுதிக்கணங்களில் உலகம் பார்த்திருக்க நடாத்தப்பட்ட இன அழிப்பானது மனித நாகரீகத்தின் சோகமான அடையாளமாகும்.
இந்நிலையில் போரின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் வாழ்வு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. நுட்பமான இன அழிப்பு விடயங்கள் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன.
தமிழரின் பூர்வீக பிரதேசங்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் இன விகிதாசாரம் மாற்றப்படுகிறது. தமிழர்களின் வாழ்வாதார வழிகள் பல முடக்கப்பட்டு அவர்கள் மீது இடப்பெயர்வு அவசிய நிலை திணிக்கப்படுகிறது.
என்றுமில்லாத அளவுக்கு உச்சக் கட்டத்தை அடைந்துள்ள இன அழிப்பால் துவண்டிருந்த ஈழத் தமிழினம் சமீபத்திய இந்தியப் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை மிகவும் நம்பிக்கையோடு பார்க்கிறது.
இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை, மற்றும் தமிழர் நிரந்தரத் தீர்வு குறித்து தாயகத் தமிழர் மற்றும் புலம்பெயர் தமிழரிடையே பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென்கிற கொள்கைகளை முன்வைத்து களம் கண்ட அ.தி.மு.க. வின் இமாலய வெற்றி எமது நம்பிக்கையை மேலும் வலுவூட்டியிருக்கிறது.
தேர்தலுக்கு பின்னரும் ஈழத்தமிழர் தீர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும் தமிழக முதல்வரின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்குரியவை.
அவருடைய நிலைப்பாடுகள் ஈழத் தமிழரின் ஆழமான அரசியல் தாகங்களை வெளிப்படுத்தி நிற்பதோடு உலக ஜனநாயக நெறிகளை சரியாக பிரதிபலிக்கிறது.
பல இழப்புக்களைக் கடந்தும் எண்ணற்ற உயிர்த் தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்டதுமான உரிமைப் போராட்டத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள். என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeq1.html
அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகளுக்கு மனவள ஆலோசனை
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 03:06.11 PM GMT ]
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகள் மத்தியில் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் இரண்டு பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
மிகவும் அழுத்தமான மனநிலையினாலேயே இவ்வாறான தற்கொலை முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் அவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கும் நடவடிக்கைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ஒப்பந்தம் இருக்கும் வரைக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என ஆஸியில் உள்ள அகதிகளுக்கான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
தமது நண்பர்கள் இருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில், தாமும் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தினாலேயே இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழ் நாட்டின் அகதி முகாம் ஒன்றில் இருந்து கடந்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த அவர், பாதுகாப்பு வீசாவில் தங்கி இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தீக்குளித்தார்.
அவர் தாம் எந்த தருணத்திலும் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வசித்து வந்ததாக அவருடன் வசித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான அகதி கோட்பாட்டின் கடும்போக்கு நிலை காரணமாக எதிர் காலத்தில் இன்னும் உயிர்களை இழக்க நேரிடும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அபாட் அரசாங்கம், இலங்கை ஜனாதிபதியுடனான ஒப்பந்தம் இருக்கும் வரைக்கும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது.
இலங்கை அகதிகளை மட்டும் திட்டமிட்டு நாடுகடத்துவது உண்மையில் அவுஸ்ரேலிய மக்கள் மத்தியில் மிகவும் வேதனையளிக்க கூடிய விடயமம் எனவும் மேலும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeq0.html
Geen opmerkingen:
Een reactie posten