[ புதன்கிழமை, 04 யூன் 2014, 11:35.46 AM GMT ]
பம்பலப்பிட்டியை சேர்ந்த கோடிஸ்வரான வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை சம்பந்தமாகவே முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசேட மேல் நீதிமன்றத்தில் ரோஹினி வல்கம, லியோன் செனவிரட்ன, லலித் ஜயசூரிய ஆகிய மூன்று நீதிபதிகள் குழுவின் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முடியும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என அரச சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.
எனினும் இவ்வாறான கோரிக்கையை சட்டமா அதிபர் தனிப்பட்ட ரீதியில் விடுக்க வேண்டும் என வாஸ் குணவர்தனவின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
எனினும் சட்டமா அதிபர் தனக்கு அந்த அனுமதியை வழங்கியிருப்பதாக அரச சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனையடுத்து சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதா அல்லது பிணை வழங்குவதாக என்பது குறித்து நாளை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfuy.html
மனைவி, பிள்ளைகளை கொலை செய்து எரித்த நபருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 12:04.43 PM GMT ]
50 ஆயிரம் ரூபா ரொக்கம் மற்றும் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு கல்கிஸ்சை நீதவான் சுபர்ஷா ரணசிங்க இன்று உத்தரவிட்டார்.
விஜயமுனி மதுர மதுரங்க டி சில்வா என்ற நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்து எரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyG
வாகரையில் கட்டுத்துவக்கு வைத்திருந்த நபர் கைது
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 12:26.46 PM GMT ]
சின்னத்தட்டுமுனை வாகரையைச் சேர்ந்த மோ.சுபாஸ்கரன் வயது (24) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவித்தனர்.
இவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாகரை சுற்றுலா நீதிவான் நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfu3.html
அகதிகளை நாடுகடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மலேசியாவில் ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 12:43.36 PM GMT ]
மூன்று இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து, மலேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் அந்நாட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மூன்று தமிழர்களை திருப்பி அனுப்பிய தலைமை பொலிஸ் அதிகாரி டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கருக்கு எதிராக கண்டன மனு வழங்கப்பட்டது.
இன்று காலை சுமார் 11 மணியளவில் கோலாலம்பூர் புக்கிட் அமான் பொலிஸ் தலைமையகம் முன் திரண்ட இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் அம்மனுவை வழங்கினர்.
கடந்த மே மாதம் 15-திகதி கிருபாஹரன், கிருபநாதன் மற்றும் குசேந்தன் என்பவர்களை மலேசிய பொலிஸ் கைது செய்தது. அதன் பிறகு அவர்களை மே 26ம் திகதி இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.
இது சார்பாக கருத்துரைத்த பொலிஸ் அதிகாரி,
அம்மூவரும் விடுதலை புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கருதுவதாகவும், அதனால் அவர்களை குடிவரவு சட்டத்தின் கீழ் திரும்ப அனுப்புவதாக கூறினார்.
மேலும் மலேசியாவில் உள்ள இலங்கை அகதிகளை கண்காணிக்க போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுவராம் என்ற மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கா. ஆறுமுகம், அனைத்துலக நீதி கோட்பாடுகளுக்கு முரணாக பொலிஸ் தலைமை அதிகாரி, அகதிகளை நாடு கடத்தி மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைத்ததை கடுமையாகச் சாடினார்.
அம்மூவரும் நடத்தப்பட்ட முறை குடிவரவுச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை அரசாங்கம்தான் இந்த நடவடிக்கையின் இயக்குனர். அதற்கு உடந்தையாக மலேசியப் பொலிஸ் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்றும் ஆறுமுகம் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைதாங்கிய அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளரான மகாலட்சுமி இராமகிருஷ்ணன்,
மலேசிய பொலிஸ் தமிழ் அகதிகளை திரும்பவும் இலங்கைக்கு அனுப்புவது மிகவும் கொடூரமானது. இனியும் இப்படி செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என கூறியதுடன், இலங்கையில் முஸ்லீம் மக்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதையும் சுட்டிக்காடினார்.
இதில் கலந்து கொண்ட செலயாங் நகர சபை உறுபினருமான குணராஜ்,
போஸ்னியா, பாலஸ்தீன் போன்ற நாடுகளின் அகதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பையும் வாழ்வாதாரா வழிமுறைகளையும் வழங்கும் மலேசியா, ஏன் தமிழர் அகதிகளை பழிவாங்க முற்படுகிறது என கேள்வி எழுப்பினார்.
இன்று வழங்கப்பட்ட மனுவில், மலேசியாவில் வாழும் பெரும்பான்மை தமிழர்கள் ஈழப்போரட்டத்திற்கு ஆதரவு நல்கியவர்கள் என்றும், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தமிழர்கள் மீதான இன படுகொலை, இன அழிப்பு சம்பவங்களின் அடிப்படையில் மலேசியா, இலங்கை மீதான தனது வெளியுறவு கொள்கையை மறு பரிசீலனை செய்ய மலேசிய சமூக இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கண்டன மனுவை புக்கிட் அமான் தலைமையத்தின் தொடர்புத்துறை அதிகாரி டிஎஸ்பி ரிசால் பின் அப்துல் சிடெக் பெற்றுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfu4.html
Geen opmerkingen:
Een reactie posten