தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காது! அமீர் அலி நியமிக்கப்படலாம்!

அணிசேரா அமைப்பின் கோட்பாடுகள் மதிக்கப்படவேண்டும்!- இலங்கை
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 12:13.32 PM GMT ]
இலங்கை மற்றும் அல்ஜீரிய என்பன அணிசேரா இயக்கத்தின் முக்கிய கோட்பாடுகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இயக்கத்தின் கோட்பாடுகளை பயன்படுத்தி, சமகால சூழ்நிலையில், நாடுகள் தமது பிரச்சினைகளை தீர்க்க சொந்தமான மற்றும் அபிலாஷைகளுக்கு அழுத்தங்கள் இல்லாத முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வழக்கமான அரசியல் அடிப்படையிலான கலந்துரையாடல்கள் தொடர்பான விரிவான உடன்பாடு ஒன்றில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூம் அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் ராம்டேன் ரம்ஹெம்ரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அல்ஜீரியாவின் தேசிய மாளிகையில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.


அல்ஜீரியாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 17வது அமைச்சர்களின் கூட்டத்தில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.


அல்ஜீரியா அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தின் தலைமை பதவியை வகித்து வருவதுடன் இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமை பதவியை வகித்து வருகிறது.


இலங்கை மற்றும் அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர்கள் இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்ததுடன் சர்வதேச மட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையில் மிக நெருங்கமான ஒத்துழைப்புகள் இருந்து வருவதாக குறிப்பிட்டனர்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரச்சினையில் அல்ஜீரியா புரிந்துணர்வுடன் இலங்கையை மதித்து ஆதரவளித்தை தொடர்பில் அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்து கொண்டார்.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அல்ஜீரியா வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அல்ஜீரியாவின் அதிகளவான ஒத்துழைப்புகளை பெறும் வழிமுறைகளை ஆராய இலங்கை ஆர்வம் கொண்டுள்ளது எனவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர இலங்கையின் நல்லிணக்க அணுகுமுறை குறிப்பாக அண்மைய கால முயற்சிகள் குறித்து அமைச்சர் பீரிஸ் , அல்ஜீரிய அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfu1.html

கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காது! அமீர் அலி நியமிக்கப்படலாம்!
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 11:24.38 AM GMT ]
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காது என நம்பகரமாக தெரிய வருகின்றது.
முதலமைச்சர் பதவியால் கட்சிக்குள் ஏற்படப்போகும் பாரிய பிளவை தவிர்க்கும் பொருட்டே முஸ்லிம் காங்கிரஸ் குறித்த தீர்மானத்தை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, கிழக்கு மாகாண புதிய முதலமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி நியமிக்கப்படலாமென அரச தரப்பு தகவல்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கும் வழங்கலாம் என்பது தொடர்பில் மு.கா. பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதிலும் அப்பேச்சுக்கள் அனைத்தும் எவ்வித இணைக்கப்பாடின்றியே நிறைவு பெற்றது.
மு.கா. வின் மாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் மன்சூர் ஜெமீல் ஆகியோரின் பெயர்களுடன் அமைச்சர் ஹாபிஸ் நஸீரின் பெயரும் முதலமைச்சர் பதவிக்கு பலமாக அடிக்கப் பட்டபோதும் விட்டுக்கொடுப்பு இன்மையாலும் கட்சியிலுள்ள ஏனையோரின் விருப்பு வெறுப்புக்களினாலும் இந்த முயற்சி தோல்வி கண்டது.
அதன் பின்னர் - மு.கா. வின் செயலாளர் நாயகமும் தேசியப் பட்டியல் எம்.பி.யுமான ஹஸன் அலியை முதலமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்வதென்றும் அதற்குரித்தான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதியை சந்திப்பதேன்ரம் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டது. எனினும் அந்த முயற்சியும் கை கூடவில்லை.
இதனையடுத்தே கட்சியின் பிளவை தடுக்கும் வகையில் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்ற முடிவுக்கு மு.கா. வந்துள்ளதாக கட்சிப் பிரமுகர்கள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.
மு.கா. முதலாமைச்சர் பதவியை ஏற்குமாயின் மு.கா.விடம் தற்போது கைவசமுள்ள இரண்டு மாகாண அமைச்சர்களும் அரசால் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாம். அதன்படி மன்சூர் வகிக்கும் சுகாதார அமைச்சு, அ.இ.ம.கா.வின் அமீர் அலிக்கும், ஹாபீஸ் நஸீர் வகிக்கும் விவசாய அமைச்சு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் நஜீப் அப்துல் மஜீதுக்கும் வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்ததாம்.
இவ்வாறான நிலையில் அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் கிழக்கு முதலமைச்சர் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியால் இறுதித் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப் படவுள்ளது. இதன்போது மு.கா தலைமைக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அ.இ.ம.கா - கிழக்கு முதலமைச்சர் பதவியை - அமீர் அலிக்கு வழங்குமாறு கோரிக்கை விடவுள்ளது. இதற்கு சிலவேளை எதிர்ப்பு தெரிவிக்குமாயின் " அப்படியாயின் கிழக்கு முதலமைச்சர் பதவியை நீங்கள் எடுங்கள்" என்ற தொனியில் அரசு மு.கா.வை அழுத்தமாக கோரும் நிலை ஏற்படும்.
இதனால் பாரிய சங்கடத்தை எதிர்கொள்ளும் மு.கா - வேறு வழியின்றி அ.இ.ம.கா. கிழக்கு முதலமைச்சர் பதவியை ஏற்பதில் விருப்பமின்றி பதவியை ஏற்க ஆதரவு தெரிவிக்க நேரிடுமென மு.கா. முதலைமைச்சர் பதவியை ஏற்பதில் விருப்பமின்றி காணப்படும் மு.கா. பிரதிநிதிகள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
எது எப்படியாயிருந்த போதிலும் அமைச்சர் அதா உல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை ஏற்பதற்கோ அல்லது தற்போதைய முதலமைச்சரான நஜீப் எ மஜீத் அப்பதவியில் தொடர்வதற்கோ மு.கா. கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZft7.html

Geen opmerkingen:

Een reactie posten