தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

ஆஸி.பிரதமரின் கடும்போக்கு கொள்கையே அகதிகள் தீக்குளிக்க காரணம்!

வட மாகாண சபை தேசிய மொழிக் கொள்கையை மீறி செயற்படுகிறது: ஜாதிக ஹெல உறுமய
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 01:23.38 PM GMT ]
அரச கரும மொழி கொள்ளை செயற்படுத்தப்படாத காரணத்தினால் இலங்கையில் உள்ள சிங்கள மக்களை போல் ஏனைய இன மக்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அறிந்தே மொழிக் கொள்கை மீறப்படுமாயின், அது பாரதூரமான பிரச்சினையாகும் என்பதுடன் பாரிய அநீதி சகல இன மக்களுக்கும் ஏற்படக் கூடும்.
முக்கியமாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு இயங்கி வருகிறது. அந்த அமைச்சின் ஊடாக மொழிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்.
பெருமளவில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கூட சிங்கள மொழியில் நிர்வாகம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அந்த குற்றச்சாட்டுக்களில் குறைந்தளவேனும் உண்மை இருக்கலாம்.
தேசிய மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் தாம் வாழும் பிரதேசங்களில் தமிழில் பணிகளை செய்து கொள்ள முடியும் என்பதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
எனினும் அண்மையில் ஒரு தினத்தில் ஜாதிக ஹெல உறுமயவிற்கு வடக்கு மாகாண சபையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழில் அந்த கடிதம் இருந்ததுடன் அதில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை எமது கட்சியினால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் இப்படியான கடிதம் ஒன்று வடக்கு மாகாண சபைக்கு சிங்கள மொழியில் அனுப்பியிருந்தால், நாட்டிற்குள் பாரிய பிரச்சினை உருவாகியிருக்கும்.
வடக்கு மாகாண சபை அறிந்தே அந்த கடிதத்தை தமிழ் மொழியில் ஜாதிக ஹெல உறுமயவிற்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் தேசிய மொழி கொள்கை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன் மீறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை தேசிய மொழி கொள்கையை மீறி வருகிறது. இது தொடர்பான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfu6.html
ஆஸி.பிரதமரின் கடும்போக்கு கொள்கையே அகதிகள் தீக்குளிக்க காரணம்
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 01:01.09 PM GMT ]
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் தற்கொலை செய்துக் கொள்வதன் மூலம்,  அந்நாட்டின் அகதிக் கொள்கை தோல்வி கண்டுள்ளது என்பதையே எடுத்துக் காட்டுவதாக பசுமை கட்சி தெரிவித்துள்ளது.
பசுமைக் கட்சியின் செனட் சபை உறுப்பினர் சாரா ஹன்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட இலங்கை அகதியான லியோ சீமான்பிள்ளை (29 வயது) என்ற இலங்கையர், மெல்போர்ண் வைத்தியசாலையில் வைத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.
இந்த நிலையிலேயே சாரா ஹன்சன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அகதிகளின் உயிர்கள் பாதுகாக்கப்படும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது அகதிக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள், தாம் மீண்டும் நாடுகடத்தப்படுவதை விட, அங்கேயே மரணித்துவிடலாம் என்ற நிலையில் இருப்பதாக த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்திலேயே பெரும்பாலான இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் கடந்த மாதம் மற்றுமொரு இலங்கை அகதி இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில், தமக்கு தாமே தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfu5.html

Geen opmerkingen:

Een reactie posten