தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

தமிழக அரசே நடவடிக்கை ஏடு !


ஜூன் 20 - உலக அகதிகள் நாள், இந்த அகதிகள் நாளில் திருச்சி சிறப்புமுகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.
தேவரூபன் எனும் 27 வயது வாலிபர் கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளார். விடுதலை எப்பொழுது என்றே தெரியாது இருந்தவந்த இவர் தன்னை விடுதலை செய்யக்கோரி கடந்த ஜூன் 10ம் தேதி உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுது காவல்துறையினர் இவரை மிரட்டி உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் அதிகப்படியான தூக்க மாத்திரையை பயன்படுத்தி தற்கொலை முயற்சி செய்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட அவர் மீண்டும் இன்று திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அப்பொழுது அவர் தாசில்தாரை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவரை நீலகண்டன் என்ற காவல்துறை ஆய்வாளர் கடுமையாக தாக்கி, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் தேவரூபனின் கழுத்தை பிடித்து உள்ளே தள்ளி கதவை பூட்டி விட்டார் . அகதி நாய்கள் என்று திட்டியுள்ளார் .
இதனால் விரத்தியடைந்த தேவரூபன் தனது கையை அறுத்துக்கொண்டு சாக போவதாக தெரிவித்துள்ளார் . கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்ற போது அருகிலிருந்தவர்கள் பார்த்து அவரை தடுத்துள்ளனர். அதிகப்படியான இரத்த இழப்பின் காரணமாக தேவரூபன் இன்று மீண்டும் திருச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தோழர்களே ஈழத்தில் சிங்கள இனவெறி ராணுவம் செய்துவரும் கொடுமைகளுக்கு சற்றும் குறையாத வகையில் தமிழக சிறப்பு வதை முகாம்களில் நமது தொப்புள்கொடி உறவுகள் வதைக்கப்படுகிறார்கள். நம் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் இந்த கைவிடப்பட்ட மக்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்.

Geen opmerkingen:

Een reactie posten