தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

தலிபான்கள் அமெரிக்க அதிர்பர் ஓபாமாவுக்கு கொடுத்துள்ள அடி இது தான் ! 0

சமீபத்தில் யார் சொன்னது அமெரிக்கா பேரம் பேசாது என்ற தலைப்பில் நாம் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம். அதாவது அமெரிக்கா அக்பானிஸ்தானில் தனது படை வீரர் ஒருவரை பறிகொடுத்தது. தாலிபான்களும் அல்கைடா தீவிரவாதிகளும் இணைந்து இந்த அமெரிக்க வீரரை சிறைப்பிடித்து சென்றுவிட்டார்கள். சுமார் 5 வருடங்களாக அவரை தலிபான்கள் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்கள். தற்போது அமெரிக்க சிறையில் உள்ள , தாலிபான்கள் 5 பேரை விடுதலை செய்தால், தாம் அமெரிக்க வீரரை விடுதலை செய்வதாக அவர்கள் அறிவித்தார்கள். வழமையாக இப்படியான பேரம் எதற்கும் அமெரிக்கா உடன்படுவது இல்லை. ஆனால் ஓபாமாவின் நிர்வாகம் இதற்கு ஒப்புக்கொண்டது. இதுவே அமெரிக்காவுக்கு விழுந்துள்ள பாரிய அடி ! 

ஏன் எனில் இந்த கைதிகள் பரிமாற்றத்தை அப்படியே வீடியோ எடுத்துள்ள தலிபான்கள், "இனி நீங்கள் அக்பானிஸ்தான் வரக்கூடாது" என்று கூறி அமெரிக்க வீரரை அனுப்பியுள்ளார்கள். இந்த காட்சியை அப்படியே வீடியோ எடுத்து, பல அரபு தொலைக்காட்சிகளில் போட்டு காட்டியுள்ளார்கள். அமெரிக்கா தமக்கு அடிபணிந்துவிட்டதாகவும், இக் கைதிகள் பரிமாற்றம் ஊடாக தாம் வைத்த நிபந்தனைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்றுக்கொண்டு அடிபணிந்துள்ளதாகவும், தலிபான்கள் போட்டு தாக்குகிறார்கள். யூ-ரியூப், சமூக வலையத்தளங்கள், மற்றும் TV க்களில் இச் செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது.

கைதிகள் பரிமாற்ற விடையம் அமெரிக்க அதிபர் ஓபாமாவுக்கு இப்படியானதொரு எதிர் வினையை தோற்றுவிக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இதோ அந்த வீட்டியோ இணைப்பு. 



http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6926

Geen opmerkingen:

Een reactie posten