தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

யாழ் இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு 73பேர் (படம் இணைப்பு)!


யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு 73பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள், பலாலி படைத் தலைமையகத்தில் வைத்து நாளை வியாழக்கிழமை (05) கையளிக்கப்படவுள்ளதாக இராணுவத்தின் 511ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த மென்டிஸ் தெரிவித்தார்.

மேற்படி தொண்டர் படையணிகான நேர்முகத் தேர்வில் 273பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 73பேர் மாத்திரமே தெரிவாகினர்.இவ்வாறு நியமனம் பெறுபவர்கள் சாவகச்சேரி, இயக்கச்சி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் கடமையாற்றவுள்ளனர் என்று அவர் கூறினார்.

இதேவேளை, தமிழ் மொழியினைக் கற்றுமுடித்த இராணுவத்தினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (05) மாலை காங்கேசன்துறை தல்செவன விருந்தினர் விடுதியில் இடம்பெறவுள்ளது.

இவர்களுக்கான சான்றிதழ்களை யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
04 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401868987&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten