[ புதன்கிழமை, 25 யூன் 2014, 08:39.00 AM GMT ]
வட்டரக்க விஜித தேரர், அவருக்கு பின்னால் இருந்து அவரை வழி நடத்தி வரும் நபர்கள் மீது பொதுபல சேனா அமைப்பு தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தி, தமது அமைப்புக்கும், தனக்கும் ஏற்படுத்திய அவமதிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட்டரக்க விஜித தேரரின் நடிப்பு பற்றி இதற்கு முன்னரும் நாம் தகவல் வெளியிட்டிருந்தோம்.
வட்டரக்க விஜித தேரர், மஹியங்கனை பிரதேச சங்க சபையினால் சங்க கட்டளை விதிக்கப்பட்டு, பிராக்ம தண்டனை விதிக்கப்பட்டவர் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaeu2.html
கோத்தா உள்ளே! அஸ்வர் வெளியே- அரசாங்கம் திட்டம்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 09:53.48 AM GMT ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிர்வாக சேவை பதவியி்ல் இருந்து கொண்டு அரசியல் விடயங்களில் தலையிடுவது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தன்னை செயலாளர் (லேகம்துமா) என்று அழைக்காமல் ஸேர் என்றே அழைக்க வேண்டும் என்று அவர் போடும் நிபந்தனை அமைச்சர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் கோத்தபாய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமித்து, அதிகாரம் மிக்க அமைச்சர் அல்லது பிரதமர் பதவியைக் கையளிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதனையடுத்து தற்போது தேசியப் பட்டியல் நியமன உறுப்பினரான அஸ்வர் ஹாஜியாரை தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வாறு பதவி விலகிய பின் அவருக்கு மேல் மாகாணம் அல்லது வடமேல் அல்லது வடக்கு மாகாண ஆளுனர் பதவியை அளிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அஸ்வர் ஹாஜியாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் பௌசி இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் முதலாவது பதவிக் காலத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினரான அன்வர் இஸ்மாயிலின் வெற்றிடத்துக்கு பசில் ராஜபக்ஷவை நியமித்த விடயம் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே போன்று தற்போது இன்னோர் முஸ்லிம் உறுப்பினரை பதவி விலக்கி, கோத்தபாயவை நியமித்தால் அது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இவ்விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு விரைவில் தீர்வு காண ஜனாதிபதி முயற்சித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaeu3.html
இனவாதிகளுக்கெதிரான துணிச்சல்- பாலித எம்.பி.க்கு அமெரிக்கா பாராட்டு
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 10:06.03 AM GMT ]
அளுத்கமவில் நடைபெற்ற இனவாதக் கலவரத்தின் போது சிங்களவர்களால் கொல்லப்பட இருந்த முஸ்லிம் குடும்பமொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் தெவரப்பெரும காப்பாற்றியிருந்தார்.
அச்சந்தர்ப்பத்தில் அவரும் தாக்குதலுக்கு உள்ளானதுடன், அவரது வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொலிசாரின் ஒத்துழைப்புடனேயே அளுத்கம கலவரம் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், தொடர்ந்தும் இனவாதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் உயிரைத் துச்சமென மதித்து இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதில் துணிச்சலுடன் செயலாற்றிய பாலித எம்.பி.க்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் பாலித தெவரப்பெருமவை தொடர்புகொண்டுள்ளார். நாளை அவரைச் சந்திக்கவுள்ள பாலித எம்.பி. அதன்போது இனக்கலவரம் தொடர்பான உண்மை நிலையை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே வாக்கு வங்கி அரசியல் கலாசாரத்தை உதறியெறிந்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்து வரும் பாலித தெவரப்பெரும எம்.பி.க்கு முஸ்லிம் சமூகமோ, அதன் அமைப்புகளோ எதுவித பாராட்டுகளையும் தெரிவிக்காமல் இருப்பது முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி விடும் என்பதாக நடுநிலையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் பாலித தெவரப்பெருமவை தொடர்புகொண்டுள்ளார். நாளை அவரைச் சந்திக்கவுள்ள பாலித எம்.பி. அதன்போது இனக்கலவரம் தொடர்பான உண்மை நிலையை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே வாக்கு வங்கி அரசியல் கலாசாரத்தை உதறியெறிந்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்து வரும் பாலித தெவரப்பெரும எம்.பி.க்கு முஸ்லிம் சமூகமோ, அதன் அமைப்புகளோ எதுவித பாராட்டுகளையும் தெரிவிக்காமல் இருப்பது முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி விடும் என்பதாக நடுநிலையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaeu4.html
Geen opmerkingen:
Een reactie posten