மீனவர்களை விடுவிப்பதற்கு இந்திய இராஜதந்திர முயற்சி
சிறிலங்கா அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வது குறித்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் சிறிலங்கா கடற்படையினரால் 64 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறிலங்காவில் 64 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து வழக்கமான இராஜத்தந்திர வழிமுறைகள் ஊடாக பேசி வருகிறோம். கடந்த காலத்தில் இந்த வழிமுறைகள் ஊடாகவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. அதுபோலவே இப்போதும் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை நாம் தொடர்ந்து சிறிலங்காவின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74557.html
ஐ.நா விசாரணைக் குழு உறுப்பினர் விபரம் 10 நாட்களுக்குள் அறிவிப்பு
சிறிலங்காவில் போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் விபரம் இன்னும் பத்து நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், இரண்டு வெளியக நிபுணர்கள் நியமிக்கப்படவுள்ளனர். நியூசிலாந்தின், டேம் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்டி அதிசாரி ஆகியோர் வெளியக நிபுணர்களாக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதும் அதனை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் இன்னமும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/74566.html
Geen opmerkingen:
Een reactie posten