தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

மறைந்துள்ள முன்னாள் கிழக்கு தளபதி ராம்! விபரங்கள் வெளியானது…

எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் வழக்கு ஒத்திவைப்பு!

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனோரான விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான வழக்கினை முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ம.ஆனந்தராஜா, ஜுலை மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்த குறித்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மேற்படி வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அரச சட்டத்தரணி, மன்றிற்கு சமூகமளிக்கவில்லை. இதனால் குறித்த வழக்கினை ஜுலை 21 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இது தொடர்பாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னர் நியமிக்கப்பட்ட அரச சட்டத்தரணி ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகச் சென்றமையினால் குறித்த வழக்கு இழுபறி நிலையில் இருந்து வந்தது.
தொடர்ந்து பிறிதொரு அரச சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி வழக்கு இடம்பெற்றது.
இருந்தும் இன்று (05) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வருகை தரவில்லை. இதனால் இந்த வழக்கு இழுபறி நிலையில் இருந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/72115.html


கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி SLMCக்கு உறுதியானது

அதற்கமைய, கிழக்கு மாகாண புதிய முதலமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி நியமிக்கப் படலாமென அரச தரப்பு தகவல்களிலிருந்து தெரிவிக்கப் படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கும் வழங்கலாம் என்பது தொடர்பில் மு.கா. பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதிலும் அப்பேச்சுக்கள் அனைத்தும் எவ்வித இணைக்கப் பாடின்றியே நிறைவு பெற்றது.
மு.கா. வின் மாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் மன்சூர் ஜெமீல் ஆகியோரின் பெயர்களுடன் அமைச்சர் ஹாபிஸ் நஸீரின் பெயரும் முதலமைச்சர் பதவிக்கு பலமாக அடிக்கப் பட்டபோதும் விட்டுக்கொடுப்பு இன்மையாலும் கட்சியிலுள்ள ஏனையோரின் விருப்பு வெறுப்புக்களினாலும் இந்த முயற்சி தோல்வி கண்டது.
அதன் பின்னர் – மு.கா. வின் செயலாளர் நாயகமும் தேசியப் பட்டியல் எம்.பி.யுமான ஹஸன் அலியை முதலமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்வதென்றும் அதற்குரித்தான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதியை சந்திப்பதேன்ரம் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டது.
எனினும் அந்த முயற்சியும் கை கூடவில்லை.
இதனையடுத்தே கட்சியின் பிளவை தடுக்கும் வகையில் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்ற முடிவுக்கு மு.கா. வந்துள்ளதாக கட்சிப் பிரமுகர்கள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.
மு.கா. முதலாமைச்சர் பதவியை ஏற்குமாயின் மு.கா.விடம் தற்போது கைவசமுள்ள இரண்டு மாகாண அமைச்சர்களும் அரசால் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாம்.
அதன்படி மன்சூர் வகிக்கும் சுகாதார அமைச்சு, அ.இ.ம.கா.வின் அமீர் அலிக்கும், ஹாபீஸ் நஸீர் வகிக்கும் விவசாய அமைச்சு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் நஜீப் அப்துல் மஜீதுக்கும் வழங்க உத்தேசிக்கப் பட்டிருந்ததாம்.
இவ்வாறான நிலையில் அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் கிழக்கு முதலமைச்சர் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியால் இறுதித் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப் படவுள்ளது.
இதன்போது மு.கா தலைமைக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அ.இ.ம.கா – கிழக்கு முதலமைச்சர் பதவியை – அமீர் அலிக்கு வழங்குமாறு கோரிக்கைக் விடவுள்ளது. இதற்கு சிலவேளை எதிர்ப்பு தெரிவிக்குமாயின் ” அப்படியாயின் கிழக்கு முதலமைச்சர் பதவியை நீங்கள் எடுங்கள்” என்ற தொனியில் அரசு மு.கா.வை அழுத்தமாக கோரும் நிலை ஏற்படும்.
இதனால் பாரிய சங்கடத்தை எதிர்கொள்ளும் மு.கா – வேறு வழியின்றி அ.இ.ம.கா. கிழக்கு முதலமைச்சர் பதவியை ஏற்பதில் விருப்பமின்றி பதவியை ஏற்க ஆதரவு தெரிவிக்க நேரிடுமென மு.கா. முதலைமைச்சர் பதவியை ஏற்பதில் விருப்பமின்றி காணப்படும் மு.கா. பிரதிநிதிகள் சிலர் சுட்டுக்காட்டுகின்றனர்.
எது எப்படியாயிருந்த போதிலும் அமைச்சர் அதா உல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை ஏற்பதற்கோ அல்லது தற்போதைய முதலமைச்சரான நஜீப் எ மஜீத் அப்பதவியில் தொடர்வதற்கோ மு.கா. கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/72108.html

மறைந்துள்ள முன்னாள் கிழக்கு தளபதி ராம்! விபரங்கள் வெளியானது…

விடுவிக்கப்பட்ட அவர் தற்போது விடுதலைப்புலிகளது முன்னாள் போராளிகளை சந்தித்து தனது இயலாமையினை எடுத்துக்கூறியுள்ளதுடன் கிழக்கினை கல்வி ரீதியினில் மேம்படுத்த பங்கெடுக்க அழைப்பு விடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது.
தொடர்ந்தும் படையினரது கண்காணிப்பின் கீழேயே அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது பயணத்தின் போதெல்லாம் அவர்களும் இணைந்து வருகை தருவதாகவும் குறித்த முன்னாள் போராளிகள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையினிலேயே வெலிகந்த புனர்வாழ்வு முகாமிலிருந்து ராம் விடுவிக்கப்பட்டதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரியவருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/72112.html

Geen opmerkingen:

Een reactie posten