அரசாங்கம் இணைய தளங்களை தடை செய்யுமா என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாகரீகமான சமூகத்திற்கு இடையூறாக அமைந்துள்ள இணைய தளங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையிலும் சில வேளைகளில் இணைய தளங்களில் தகவல் வெளியிடப்படக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இணைய தளங்கள் முடக்கப்படுவதற்கு ஊடக அமைச்சரை குற்றம் சுமத்த முடியாது எனவும் ஆளும் கட்சியின் பலம்பொருந்திய நபர்கள் இணைய தளத் தடையின் பின்னணியில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் குறிப்பிடும் இந்த அவதூறு என்னும் சொல், இலங்கையில் உள்ள முக்கியஸ்தர்களையே குறிக்கிறது. அப்படி என்றால் இனி கோட்டபாய ராஜபக்ஷவை நல்லவர் ஒரு வல்லவர் என்று அல்லவா எழுதவேனும் போல இருக்கே ? என்ன கொடுமை சரவணா இது ?
http://www.athirvu.com/newsdetail/22.html
Geen opmerkingen:
Een reactie posten