யாழ்.கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீடு புகுந்து மாணவன் ஒருவனை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உரும்பிராய் பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை கோப்பாய் பொலிஸில் சரணடைந்துள்ளார்.அதேவேளை கொலை செய்யப்பட்ட மாணவனின் இரு சகோதர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.அவர்கள்; இருவரையும் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் ஒருவரான உரும்பிராய் சிவகுல வீதியினைச் சேர்ந்த யோகராசா ஜெனார்த் (24) என்பவரே இன்று சரணடைந்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருகையினில் குறித்த சம்பவத்தில் கோண்டாவிலினை சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியிருந்ததுடன் அவரது சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.
பலியாகிய சுகிர்தன் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் அவ்வீதியின் வழியாகச் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சுகிர்தனினை காலால் உதைந்துவிட்டுச் சென்றுள்ளனர். இதனை அவதானித்த சுகிர்தனின் உறவினர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்காரர்களைத் துரத்திச் சென்று அவர்களில் இருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். இதில் உரும்பிராயினைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (20)இ எம்.நிராஜன் (23) ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரின் உரும்பிராயக் கூட்டாளிகள் 7 மோட்டார் சைக்கிள்களில் திங்கட்கிழமை (16) இரவு சுகிர்தனின் வீட்டிற்கு சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் சுகிர்தன் பலியாகியதுடன் சகோதரர்கள் படுகாயமடைந்தனர். இந்தக் கொலைச் சம்பவத்தினையடுத்து உரும்பிராய்ப் பகுதியிலுள்ள 7 வீடுகள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






http://www.jvpnews.com/srilanka/74325.html
Geen opmerkingen:
Een reactie posten