தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

அவுஸ்திரேலிய அரசால் வடக்கு கிழக்குக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சிங்கள மாவட்டங்களுக்கு ஒதுக்கும் அரசு!

பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ல் விசாரணை!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 06:28.00 AM GMT ]
 பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு, அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதோடு, 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு மீது ஜூலை 7ம் திகதி விசாரணை நடத்தப்படும் என்றும், வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று வெியாழக்கிழமை அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnp2.html
ஹக்கீம், தொண்டா, ராஜபக்சவினருடன் இருந்தவாறு மக்களிடையே மோதல்களை உருவாக்குகின்றனர்! புலனாய்வு அதிகாரிகளை அரசியலுக்காக பயன்படுத்துவது பாரதூரமானது!- ரில்வின் சில்வா
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 06:52.07 AM GMT ]
நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்த இடமளிக்க கூடாது எனவும், ஹக்கீம், தொண்டமான் ஆகியோர் ராஜபக்சவினருடன் ஒன்றாக இருந்து கொண்டு மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கி வருவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாலமுனையில் ஜே.வி.பியின் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கம, தர்கா நகர் போன்ற பகுதிகளில் அண்மையில் இனவாத மோதல்கள் உருவாக்கப்பட்டன. அந்த மோதல்கள் தற்பொழுது முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும் மீண்டும் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இனவாதம் என்பது பெரும்பாலான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தேவையல்ல. சிறிய குழுவினர் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தி ஐக்கியத்தை சிதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலேயே நாங்கள் மட்டக்களப்பில் அலுவலகம் ஒன்றை திறந்து, தேசிய ஐக்கியத்திற்காக கைகோர்ப்போம் என்று அழைப்பு விடுக்க வந்துள்ளோம்.
இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இனவாதத்தினால் எமக்கு கிடைத்தது ஒன்றுமில்லை. சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தினால் கறுப்பு ஜூலை ஏற்பட்டது. இது பின்னர் 30 ஆண்டு கால போராக நீண்டு சென்றது.
இந்த போரில், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்கள் இழக்கப்பட்டன. சொத்துக்கள் அழிந்து போயின.
போரை முடிவுக்கு கொண்டு வந்து, தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் தருவாயில் இனவாத மோதல்கள் உருவாகுமாயின் அது சிறந்த நிலைமையில்லை.
இனவாதம், அடிப்படைவாதம் என்பன எந்த பக்கத்தில் இருந்து வந்தாலும் அது மக்களுக்கு நன்மையானதல்ல.
இதனால் மூவின மக்களும் ஒன்றாக கைகோர்த்து எமக்கு முன்னால் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வை தேட வேண்டும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு அதிகாரிகளை அரசியலுக்காக பயன்படுத்துவது பாரதூரமானது - ரில்வின் சில்வா
புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை அவர்களின் கடமைகளுக்கு அப்பால் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது பாரதூரமான செயல் என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர வெளியிட்டிருந்த தகவல் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பின் உறுப்பினர்களை அவர்களின் கடமைகளில் இருந்து அப்புறப்படுத்தி, கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் போதுமான சாட்சியங்கள் இருக்கின்றன.
மங்கள சமரவீர வெளியிட்டிருந்த தகவல்கள் குறித்து ஆராய்ந்து அதில் உண்மை இருக்குமாயின் உடனடியாக சம்பந்தப்பட்ட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை அவர்களுக்குரிய பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.
அரசாங்கம், புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால், புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளது பெயர்கள் தேவையற்ற சந்தர்ப்பங்களில் வெளியாகும் ஆபத்து ஏற்படும்.
இதனால் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு குறித்து சிந்தித்து செயற்படுமாயின் பாதுகாப்பு தரப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரை தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnp4.html
அவுஸ்திரேலிய அரசால் வடக்கு கிழக்குக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சிங்கள மாவட்டங்களுக்கு ஒதுக்கும் அரசு
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 06:56.37 AM GMT ]
வடக்கு கிழக்கு பிரதேச மேம்பாட்டுக்காக அவுஸ்திரேலிய அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நிதி சிங்களப் பிரதேசத்துக்கு ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிதி வடக்கு கிழக்கின் தொடுகையில் உள்ள 4 சிங்கள மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக வங்கியின் நிதியில் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச மேம்பாட்டுக்காக நெல்சிப் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் இதுவரையிலும் இந்தத் திட்டம் முடிவுறாத நிலையில் காணப்படுகின்றது. கடந்த வருட இறுதியில் முடிவுற வேண்டிய இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதி வரைக்கும் நீடிக்கிறது.
அதன்பின்னர் வடக்கு கிழக்கு பிரதேச மேம்பாட்டுக்காக அவுஸ்திரேலிய அரசு, அவுஸ்திரேலியன் எயிட் ஊடாக இலங்கைக்கு நன்கொடையாக 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலரை வழங்கவுள்ளது.
இதுவே இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் இறுதி நன் கொடை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நெல்சிப் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கே பெருமளவு நிதி வழங்கப்பட்டிருந்தது. சிங்கள மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனாலேயே அரசு வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை சிங்கள மாவட்டத்துக்கு ஒதுக்குகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnp5.html

Geen opmerkingen:

Een reactie posten