தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

முன்னாள் போராளிகளை மீண்டும் அச்சுறுத்தும் இராணுவப் புலனாய்வாளர்கள்

பொய் முறைப்பாடு: வட்டரக்க தேரருக்கு விளக்கமறியல்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:06.27 PM GMT ]
பொய் முறைப்பாட்டை பதிவு செய்த வட்டரக்க விஜித தேரரை இன்று மதியம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையிலேயே இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வட்டரக்க விஜித தேரருக்கு நீதிமன்றம் விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.  கைது செய்யப்பட்ட வட்டரக்க தேரரை பொலிஸார் பாணந்துறை நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் கடத்தப்பட்டதாகத் தெரிவித்து தமக்குத் தாமே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு பொய்யாக முறைப்பாடு செய்ததாக வட்டரக்க விஜித தேரருக்கு எதிராக பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடத்தலை தாமே செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaevz.html


இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:03.13 PM GMT ]
பேராசிரியர் சுதர்ஷன செனவிரட்ன இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பேராசிரியர் செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
1949 ம் ஆண்டு பிறந்த சுதர்ஷன செனவிரட்ன கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaevy.html
முன்னாள் போராளிகளை மீண்டும் அச்சுறுத்தும் இராணுவப் புலனாய்வாளர்கள்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:08.33 PM GMT ]
மட்டக்களப்பில் உள்ள முன்னாள் போராளிகளை இராணுவ புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்துகின்ற நபர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி விசாரணைக்காக அழைப்பதாகவும் வரமுடியாத பட்சத்தில் பல லட்சம் ரூபாய்கள் கப்பமாக கேட்பதாகவும் தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இவ்வச்சுறுத்தல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அமைதி நிலவுவதாக கூறுகின்ற இந்த அரசாங்கம் மறுபுறத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதை யாவரும் அறிவோம்.
இந்த வகையில் மட்டக்களப்பில் அமைதியாக தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளிகளை இராணுவ புலனாய்வாளர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி விசாரணைக்காக அழைக்கப்படுவதுடன் கப்பம் பெறுவதற்கும் முயற்சிக்கிறார்கள்.
போரினால் அங்கவீனமுற்று படுக்கையில உள்ள முன்னாள் போராளிகளையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. அவர்களையும் கூட புலனாய்வாளர்கள் விசாரணைக்காக அழைக்கிறார்கள்.
எனவே மீண்டும் ஒரு அச்சமான சூழலை மட்டக்களப்பில் ஏற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இது அமையுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaev0.html

Geen opmerkingen:

Een reactie posten