இதில் பாதிக்கப்பட்ட பல இலங்கையர்களும், ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் குடியுரிமை வழங்கும் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கனேடிய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மனித கடத்தல் தொடர்பிலான இந்த அறிக்கையில், கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியிலில் இரண்டாம் வரிசையில் அமெரிக்கா இலங்கையை வைத்துள்ளது. ஆட்கடத்தல்களுக்கு எதிராக முறையான நடவடிக்கையை மேற்கொள்ளாத மற்றும் ஆட்கடத்தலுக்கு தூண்டுகின்ற நாடுகள் இந்த வரிசையில் இணைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.canada-tamil