குறிப்பிட்ட புதைகுழி பிறேசிலில் உலகக் கிண்ணக் கோப்வைக்கான விளையாட்கள் நடைபெறுகின்ற இடத்திற்கு அண்மையில் ஏற்பட்டிருக்கின்றது எனத் தெரியவருகிறது. அத்துடன் இதன் அளவானது மிகவும் பெரியதாகவுள்ளது எனத் தெரிகிறது. கிட்டத்தட்ட இது பல கார்களை விழுங்கி விட்டதாகவும், கிட்டத்தட்ட 150 வீடுகளைப் பாரிய சேதத்திற்குள்ளாக்கியிருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Natel எனும் பகுதியில் இது தோற்றம் பெற்றிருக்கின்றது எனத் தெரிகிறது. குறிப்பிட்ட பகுதியில் பாரிய மழைவீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அதைத் தொடர்ந்து இவ்வாறான sinkhole தோன்றியிருப்பதாகத் தெரிகிறது.
குறிப்பிட்ட சம்பவத்தைத் தொடரந்து அப்பகுதியில் பல நூற்றுக்காணக்கான மக்கள் அந்தப் பகுதிக் குடியிருப்புக்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டும் இருக்கின்றார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவமானது உலகக் கிண்ணப் போட்டிப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்ல பீதியையும் கிளப்பியிருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட பகுதி மக்களைப் பாரவையிடுவதற்காக தலைவரான President Dilma Rousseff அங்கு விஜயம் செய்திருக்கின்றார் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதற்கு முயற்சி எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பிட்ட சம்பத்தினால் எவரும் காயமடையவில்லையெனவும் ஆனால் பாரிய அனர்த்தமும் சேதவும் ஏற்பட்டுள்ளதென அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

Geen opmerkingen:
Een reactie posten