தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

நாயை கொன்று உண்ணும் திருவிழா!!

சீனாவின் விலங்கு உரிமை ஆர்வலர்களை எதிர்த்து அந்நாட்டில் நாயை கொன்று உண்ணும் மனித தன்மையற்ற திருவிழா நடந்துள்ளது.
சீனாவின் யூலிங் நகரில் நாய்களை கொன்று உண்பதை விலங்கு உரிமை ஆர்வலர்கள் சமீபத்தில் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.
மேலும் நாய்களை கொன்று விற்பனை செய்யும் கடைகளின் மீது ஆர்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டது, மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது.
எனவே விலங்கு உரிமை ஆர்வலர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிகளவில் நாய்கள் கொல்லப்பட்டு வருவதுடன், அதனை ஒரு திருவிழா போல் அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நாய்கள் தெருக்களில் சுற்றுவதால் அபாயகரமான நோய்கள் வரும் என்றும் நாயை தாக்கியுள்ள ரசாயன பொருட்களால் அதை உண்ணும் மக்களின் உடல்நலம் கெடும் எனவும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் அதை ஏற்க மறுத்த யூலின் மக்கள், நாய் உண்ணுவது தங்கள் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும் என பாரம்பரியமாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.


நீங்க மட்டும் மீன்,ஆடு,கோழி,மாடு,பன்றி ,தொங்குமான்,முயல்,அணில் .....சாப்பிடுறீங்களே ,இது மட்டும் மனித உரிமையாக்கும்!!இவற்றை உண்ணாலாமென்று  யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது???இவற்றை சாப்பிடலாமென்றால் நாய் ,பூனை,பாம்பு.... போன்றவற்றை சாப்பிடுவது எப்படி குற்றமாகும்??ஓ நீங்கள் சாப்பிடுவதை சாப்பிட்டால் உரிமை,ஏற்றுக்கொள்ளலாம்,அவர்களாக சாப்பிட்டால் அது உங்களுக்கு பிடிக்காது என்றால் தவறாக்கும்,நல்ல மனித நேயம்தான் போங்க!!

மனிதத்தன்மை என்றால் என்ன,கொல்வதிலும் உண்பதிலும் மனிதத்தன்மை வேறுபாடு உண்டா??அனைத்தும் உயிர்தானே!

Geen opmerkingen:

Een reactie posten