மலேசியாவில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள், முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்: புலனாய்வுப் பிரிவு
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 06:01.28 AM GMT ]
விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மலேசியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இரகசிய நடவடிக்கைகளுடன்> வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தொடர்பு பற்றிய விபரங்களை கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களிடம் இருந்த பெறப்பட்ட டி.வீ.டி காணொளி மூலம் இந்த இரகசியம் அம்பலமாகியுள்ளதாக பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று முக்கிய புலி உறுப்பினர்கள் மலேசியாவில் மறைந்து இருப்பதாகவும் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸார் மூலமாக சிகப்பு அறிக்கை பிடிவிராந்தை பிறப்பிக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சர்வதேச வங்கி கணக்கின் மூலம் வெளிநாடுகளுக்கு சென்ற புலிகளின் உறுப்பினர் வாழ்ந்து வந்த விதம் பற்றியும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மலேசியாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அங்கிருந்து தமது அமைப்பிற்கு உயிரூட்டும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgt2.html
நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 06:34.35 AM GMT ]
இந்நிலையில் அந்தப் பதவிக்கு மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் ஓகஸ்ட் மாதம் முடிவடையுள்ள நிலையில், மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் தருஸ்மன் முன்னணியில் இருக்கின்றார்.
இலங்கையின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு அறிக்கையொன்றை பெறுவதற்காக நியமித்த நிபுணர்கள் குழுவின் தலைவராக தருஸ்மன் செயற்பட்டார்.
இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு வர அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்பதுடன் அது பற்றி ராஜதந்திர ரீதியில் பரவலாக பேசப்பட்டு வந்த விடயமாக இருந்தது.
இந்தோனேசியாவின் பிரபலமான அரசியல்வாதியான மர்சுகி தருஸ்மன், அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சுகாட்டோவின் லோக்கார் கட்சியின் முக்கிய உறுப்பினராவார்.
இதனை தவிர தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ள தருஸ்மன், ஆசிய மனித உரிமை வள மத்திய நிலையத்தின் ஆரம்பகர்த்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு வட கொரியா தொடர்பில் விசாரணை நடத்த நியமித்த குழுவின் உறுப்பினரான பணியாற்றிய தருஸ்மன், இராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளராவார்.
எது எப்படி இருந்த போதிலும் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகளை விட தருஸ்மனின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாதகமாக அமையும் என இராஜதந்திர வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgt4.html
மகிந்த- மோடி பேச்சு! உண்மையை உடனடியாக வெளியிடுமாறு இந்தியா அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 06:32.25 AM GMT ]
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை பற்றி இதன் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக பேசப்பட்ட விடயங்கள் பற்றிய எந்த தகவல்களும் அந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், இலங்கை அரச தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக இந்த விடயங்களை வெளியிட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளரும் இந்திய அரசின் பேச்சாளருமான சாஹிட் அக்பருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்திய பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரங்களை வெளியிடவில்லை என்றாலும் ஜனாதிபதியுடன் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட யாழ் மாநகர மேயர் பரமேஸ்வரி, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாகவும் இதன் போது மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க இலங்கை ஜனாதிபதி இணங்கியதாகவும் இந்திய தொலைக்காட்சி ஒன்றிடம் தகவல் வெளியிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgt3.html
Geen opmerkingen:
Een reactie posten