The experts and sections of the investigation team, which will include forensic experts to study digital evidence, will travel to Sri Lanka and the Asia Pacific, North America and Europe over the next eight months, to gather witness and victim testimony and access ‘other sources of information’ to complete its findings.
The international investigation that was mandated by the UN resolution on Sri Lanka passed in March this year, after being moved by the US and 42 co-sponsors, is expected to commence in the coming weeks.
http://eng.lankasri.com/view.php?20c4Y5P2203AmBdb4eacmOl74ca2C6AA0ddc4oMQCdaceTlO42e42nBmY4e03dB5YA23
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்? இருவர் கண்காணிப்பாளர்கள்
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 03:35.39 AM GMT ]
இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தவிர இந்த விசாரணையை கண்காணிக்க சர்வதேசத்தில் உயர் பதவியுடைய ஒருவர் உட்பட்ட இரண்டு பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
இது, பெரும்பாலும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் கொபி அன்னனாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தரப்புக்களை கோடிட்டு இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழுவில் சட்டமருத்துவ நிபுணர்களும் உள்ளடங்கவுள்ளனர். இவர்கள் இலங்கைக்கும் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கும், வட அமரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களுக்கு அடுத்த 8 மாதங்களில் பயணம் செய்து தகவல்களையும் சாட்சியங்களையும் திரட்டவுள்ளனர்.
இந்த வருட மார்ச்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணை யோசனைக்கு 42 அமைப்புக்கள் அனுசரணையை வழங்கியுள்ளன.
இந்தக்குழுவின் விசாரணைகள் அடுத்து வரும் வாரங்களில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgt1.html
|
Geen opmerkingen:
Een reactie posten