தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

மும்பையில் துப்பாக்கி முனையில் பெண் பாலியல் பலாத்காரம்!

மானபங்கம் செய்து சிறுமி தீ வைத்து எரிப்பு: உத்திரபிரதேசத்தின் கோர முகம் அம்பலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 02:59.28 PM GMT +05:30 ]
உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் பிரதான் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் நாட்டாமையான முன்னா சுக்லா, பார்வாலியா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப முயன்றதை தடுக்க முயற்சித்துள்ளார்.
அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் உடன்பட மறுக்கவே அவரை சுக்லாவும் அவரது ஆட்களும் பலமாக தாக்கியுள்ளனர். தந்தை அடிபடுவதை பார்த்த அவரது மகள் தாக்குதலை தடுக்க முயன்றபோது அப்பெண்ணை மானபங்கம் செய்ய முன்னா சுக்லா கும்பல் முயற்சித்துள்ளது.
அதோடு நில்லாமல் அந்த கும்பல் அப்பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டது. இதனால் அப்பெண்ணின் 90 சதவிகித பாகங்கள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக கேப்டன்மஞ்ச் காவல்நிலையத்தை சேர்ந்த நிலைய அதிகாரியான கஜேந்திர ராய் தெரிவித்துள்ளார்.
http://india.lankasri.com/view.php?20yOlJdbcS40624e3oMQ3022YmD3ddcfDmo30eM6AKae4W04A4cb2lOm23

மும்பையில் துப்பாக்கி முனையில் பெண் பாலியல் பலாத்காரம்
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 06:39.09 AM GMT +05:30 ]
மும்பையின் தானே மாவட்டத்தில் உள்ள பயாந்தர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.
நவ்கர் காவல் நிலைய துணை ஆய்வாளர் அபர்ணா வாட்கர் இதுகுறித்து கூறுகையில், மே 30ம் திகதி மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் பயாந்தர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் எதிரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அப்போது, திடீர் என்று 3 பேர் அந்த பெண்ணை காருக்குள் தள்ளி, வாயை திறந்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டி காரை ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, ஒருவர் துப்பாக்கியை தனது தலையில் வைத்து மிரட்டியபோது, தீபக் என்பவர் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளதாகவும், தற்போது இருவரையும் தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 2 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
http://india.lankasri.com/view.php?20yOlTdbce40624e3oMQ3022YmD3ddcfDmo30eM6AKae4604A4cb3lOm23

Geen opmerkingen:

Een reactie posten